சென்னை: தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக வரும் பிப்ரவரி 24-ம் தேதியன்று விரிவாக அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திங்கள் கிழமை காலை தீபா அஞ்சலி செலுத்தினார். பின்னர் இன்று காலை 11 மணியளவில் தீபா தனது தி.நகர் இல்லத்தில் நமது கப்ஸா நிருபரை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: என் உயிரினும் மேலான ரத்தத்தின் ரத்தங்களுக்கு நன்றி. எனக்கு ஆதரவளிக்கும் மக்கள், அதிமுக தொண்டர்களுக்கு நன்றி. தமிழகம், அ.தி.மு.க. நிர்வாகிகள், மற்றும் முட்டாள் தொண்டர்கள் கடந்த ஒரு மாதமாக தினமும் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தினமும் வேலை வெட்டியில்லாமல் அவர்கள் நம்பிக்கையோடு என்னை வந்து பார்த்தனர். அவர்களது நம்பிக்கையை நான் ஒரு போதும் வீணாக்க மாட்டேன். தமிழ் மக்களுக்காக இனி தொடர்ந்து பாடுபடுவேன்.
எனக்கு இன்னும் பாஜக வில் இருந்து பெட்டிகள் வரவில்லை. இன்று முதல் புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளேன். இங்கிருந்து சைதாப்பேட்டை சென்று, அங்கிருந்து பாரிஸ் கார்னர் வரை செல்வேன். பின்னர் அங்கிருந்து நேராக கோட்டை சென்று முதல்வராக பதவியேற்ப்பேன். ஏற்கனவே, நான் அரசியலில் இறங்கி விட்டேன்.ஆனால் பெட்டி வராததால் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறேன்.சசிகலா குடும்பத்தினர் கட்சியை கைப்பற்றிவிட்டதாக என்னால் கூற முடியாது, அனால் எனக்கு ஆதரவு தராமல், என் தம்பியை மட்டும் ஆதரிக்கின்றனர். . எனது அட்டை ஜெயலலிதா என்னை ஆண்ட விடாமல் விசாலி வைத்திருந்தார் , அதுபோல் சின்னம்மாவும் என்னை திருப்பிக்கூட பார்க்க மாட்டேன் என்கிறார். எனக்கு ஏதாவது வாரிய தலைவர் அல்லது வங்கியில் பணம் போட்டால் கூட இந்த அரசியல் பயணத்தை ஒத்தி வைத்துவிடுவேன் என்று அழுகும் குரலில் கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks