சென்னை: எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா 17 ஜன. சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று எம்.ஜி.ஆரின் உறவினரான சுதா தெரிவித்துள்ளார். மேலும் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி உடையக் கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ராமாவரம் தோட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சென்ற வருடம் வெள்ளத்தின் போது அம்மா செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டத்தால் எம்.ஜி.ஆர் வீட்டின் இருந்த முக்கிய ஆவணங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
இதுதொடர்பாக சென்னை ராமாபுரத்தில் சுதா கப்சா நிருபரிடம் பேசியதாவது: சசிகலா அதிமுகவின் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்
அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எங்களுக்கு எரிச்சல் தான் என்ன செய்வது கட்சி சொத்துப் பத்திரங்கள் அவரிடம் உள்ளதே.. ஜெயலலிதாவின் மரணம் குறித்து எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது என்று என்னை சொல்ல சொல்லி இருக்கிறார்கள். அவ்வளவு எளிதாக எல்லா உண்மையையும் மறைத்துவிட்டார்கள். ஊடகங்களும் ஊமையாகி நிற்கின்றன.. இந்தியா ஜனநாயக நாடு. இங்கு யாரும் அரசியலுக்கு வரலாம். தீபாவும் அரசியலுக்கு வரலாம். நான் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி அதிமுக. அது உடையக் கூடாது. அதேபோன்று அவரது இரட்டை இலை சின்னமும் நீடிக்க வேண்டும். எம்ஜிஆரின் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்பதால் தேவைப்பட்டால் நான் தீபாவுடன் சேர்ந்து ‘அப்பா அம்மா முன்னேற்ற கழகம்’ தொடங்கவும் தயங்கமாட்டேன்.’ என்று சுதா காட்டமாக தெரிவித்தார்.
There are no comments yet
Or use one of these social networks