சென்னை: ரஜினியைப் பற்றி சரத்குமார் கூறிய கருத்தால் பெரும் சர்ச்சை உண்டானது. இதனைத் தொடர்ந்து, சரத்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். துக்ளக் விழாவில் ரஜினி கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் அசாதாரண சூழல் நிலவுவதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சென்னையில் கப்சா நிருபர்களை சந்தித்தார் சரத்குமார். அவரிடம் “ரஜினியின் கருத்துக்கு உங்களுடைய பதில் என்ன?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சரத்குமார், “ரஜினி ஒரு சிறந்த கலைப்போலி. மிகப்பெரிய சூப்புற ஸ்டார். அதனை நான் ஒத்துக் கொள்கிறேன். கருத்துகள் சொல்லும் போது எப்போது தேவைப்படுகிறதோ அதாவது பட ரிலீசின் போது மட்டும் சொல்லிவிட்டு, மற்ற நேரங்களில் அமைதியாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ரஜினி கூறியிருப்பது போன்று தமிழகத்தில் அசாதாரண சூழல் இல்லை. எம். ஜி. ஆர். நடிப்பை பார்த்து சினிமாவுக்கும் அரசியலுக்கும் வந்த நாட்டாமை நான் இருக்கிறேன். எனது சொம்பு புளி போட்டு விளக்கி வைக்கப்பட்டு தயாராக இருக்கிறது. தேவைப்படும் போது கர்நாடகாவில் வேறொரு கருத்து சொல்வது, இங்கு வேறொரு கருத்து சொல்வது என இருக்கிறார் ரஜினி. நாளை ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து, முதலமைச்சராகப் போகிறேன் என்று கூறினால் அதை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். ஏனென்றால் இத்தனை நாளாக கஷ்டப்பட்டு, ராதிகாவை எல்லாம் இரண்டாவது திருமணம் செய்து வரலட்சுமியை டூ பீசில் ஆட விட்டு குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன். என் அரசியல் எதிர்காலம் நாட்டாமை சொம்பு கதி என்னாவது?” என்று காட்டமாக தெரிவித்தார்.

மேலும் “எனது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஜினி ரசிகர்கள் பலரும் புகைப்படங்களை எரித்தார்கள். சமூக வலைத்தளத்திலும் எனது ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு வசைபாடத் தொடங்கினார்கள். தேவை பட்டால் இந்த நாட்டாமை 18 பட்டியில் இருந்து அவித்த கோழி தின்று உடம்பை தேத்திவைத்துள்ள அடியாட்களை இறக்குவேன். எதையும் சந்திக்க தயாரானவன் நான் என்பதை வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் தகாத செயல்களில் ஈடுபடுவர்களை என் சமத்துவ தமிழ் பயில்வான்கள் அரஜகத்துடனும், காவல்துறை உதவியுடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியபடி தொத்தல் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஏறி பறந்தார்

பகிர்

There are no comments yet