சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்ற கருத்து வலுத்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய கலாசாரத்துக்கு புறம்பான நிலையில் இயங்கி வரும் ‘பீட்டா’ அமைப்புக்கு உடனடியாக மத்தியஅரசு தடைவிதிக்க வேண்டும் என்று திமுக ‘செயலற்ற’ தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறு தழுவுதல் என்ற மஞ்சு விரட்டு என்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தமிழர் திருநாளான பொங்கல் விழாவில் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக அணி திரண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இளைஞர்கள் திரண்டதுடன், ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விட்டு மத்திய, மாநில அரசுகளுக்குத் தங்கள் எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்வோம் என்று வாக்குறுதி அளித்த மத்திய பா.ஜ.க அரசின் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தன்னுடைய இயலாமையை ஏற்று, வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டு, ‘ஜல்லிக்கட்டுக்கு அனுமதியில்லை என்பதை தெரிவித்து விட்டார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என உறுதியளித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசோ, தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்காகக் குழுமிய இளைஞர்கள் மீது காவல்துறையை ஏவி, கண்மூடித்தனமான தடியடித் தாக்குதலை நடத்தி, தமிழகத்தில் நடப்பது ‘போலிஸ் ராஜ்யம் என்பதை நிரூபித்துள்ளது.

இது குறித்து ஸ்டலின் கப்ஸா நிருபரிடம் கூறியதாவது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொங்கள் தினத்தை தமிழ் புத்தாண்டாக அறிவித்து திமுக இரட்டை தலைமை போல், இரட்டை புத்தாண்டாக கொண்டாட வழி செய்வோம். முதலில் பீட்டா அமைப்பை பற்றி எல்லாம் எனக்கு தெரியாது, எனக்கு தெரிந்ததெல்லாம் போலித்தனமான திராவிட கொள்கையும், ஒன்றுக்கும் உதவாத நடைப்பயணமும், கழக டப்பாங்குத்து பாடல்களும் தான், எனதுமகன் உதய’நிதி’ எதிர்காலத்தில் அரசியலில் குப்பை கொட்டவும், சொத்து சேர்க்கவும் சினிமாவில் நடித்து அப்டேட்டாக உள்ளார். புதிய டெக்னாலஜிகளில் நிபுணத்துவம் பெற்று உள்ளார், போகியன்று கூட தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு ஆண்டும் நாம் பழைய பொருட்களை போகியன்று தீயில் போட்டு எரிக்கிறோம், கூடவே நமது துன்பங்கள், தோல்விகள், போன்றவற்றையும் எரிக்கிறோம் ஆனால் எங்கள் வீட்டில் ஒரு மிகப்பழமையான பொருள் இன்னும் உயிருடன் இருந்து இம்சித்துக் கொண்டிருக்கிறது,” என்று தனது தாத்தா என் தானை தலைவர் கலைஞரை கரித்துக் கொட்டினார். 400 வருஷ பழமையான ஆமை என்றும், இத்தனை கோடி சொத்து சேர்த்து தந்தவரை கடைசி நேரத்தில் தகனம் செய்ய போகி நாளை தேர்ந்தெடுத்துள்ளான். எனது மகன் இப்படி விபரமாக பேசியது எனக்கே ஆச்சரியமாக போய்விட்டது, அதைபார்த்த்துதான் நான், பீட்டாவுக்கு எதிர்ப்பாக குரல் கொடுத்தேன். தாத்தாவை பேரன் கரித்துக் கொட்டியது போல, பீட்டாவை அப்பன் நான் கரித்துக் கொட்டினேன், எதிர்க்கட்சி தலைவராக என்னால் வேறென்ன செய்ய முடியும், என்றார் தன் முகத்தில் பொய்யான கவலையை வரவழைத்துக் கொண்டு.

பகிர்

There are no comments yet