சென்னை: தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டம், அலங்கா நல்லுார் உள்ளிட்ட இடங்களில், ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். உச்ச நீதிமன்ற வழக்கால், இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இதற்கு, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மட்டு மின்றி, பல தரப்பினரிடமும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. சென்னை, மெரினா கடற்கரை மணலில், 17ம் தேதி காலை, 8:00 மணிக்கு மாணவர்கள் கூடினர். அவர்கள், ‘ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்; அலங்காநல்லுாரில் கைது செய்தவர்களை, வழக்கு பதிவு செய்யாமல் விடுவிக்க வேண்டும்; ‘பீட்டா’ அமைப்பை தடை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.
 
>இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதை யும், காலணி தயாரிப்புக்காக, கால்நடைகள் பலியாவதையும், இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களான, என்.ஜி.ஓ.,க்கள் பெரிய அளவில் எதிர்ப்பதில்லை. அதே நேரத்தில், மிருக வதை என்ற அஸ்திரம் மூலம், பாரம் பரிய விளையாட்டுக்கு குறிவைத்திருப்பது ஏன் என்ற கேள்வி, பல சந்தேகங்களை கிளப்புகிறது. நம்மூர் காளை இனங்களை அழித்து, அன்னிய வகை கால்நடைகளை இறக்குமதி செய்ய துடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மறைமுக மாக உதவுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.  அன்னிய இன மாடுகள் இங்கு அதிகரித்தால், தீவனம் முதல், மருந்து வரை, அன்னிய நிறுவனங்களையே, மக்களும், விவசாயிகளும் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த வியாபார நோக்கத்திற்கு துணை போக துடிக்கும் அமைப்புகளாகவே, பீட்டா போன்ற, என்.ஜி.ஓ.,க்கள் இருப்பது தான் வேதனை.
 
இந்நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். பீட்டாவை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும், வறட்சிக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார். இதன் பின்னர் பிரதமர் மோடி கூறுகையில், ஜல்லிக்கட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதால் தற்போது உதவ இயலாது. ஜல்லிக்கட்டு கலாசார முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஜல்லிக்கட்டு தமிழர்களின் உணர்வுடன் ஒன்றிப்போனது என்பதை உணர்ந்துள்ளேன். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்தாலும், இது தொடர்பாக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இதனால், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியாக ஏதும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
 
இதனால் பிரதமர் மோடி மீது தமிழர்களும், தமிழ் ஆர்வலர்களும் வெறுப்பில் உள்ளனர். மோடி தமிழ் கலாச்சாரத்தை சிதைக்கும் வேளையில் உள்ளார் என்று அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டம் செய்து வருகின்றனர். இது குறித்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்காக மோடியை திட்டாதீர்கள் – என்னை ஒரு மாதத்தில் முதல்வராக்குவதாக சொல்லியிருக்கிறார். ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு பொழுதுபோக்கு சமாச்சாரம். அதற்கு போய் வேலை வெட்டியில்லாமல் இப்படி இளைஞர்களும், மாணவர்களும் கடைக்கரையில் உட்கார்ந்திருப்பது வேதனையளிக்கிறது. மோடி ஜி கண்ட புதிய இந்தியா இது அல்ல. இவர்கள் கடற்கரையில் சும்மா கத்திக்கொண்டிருப்பதற்கு பதிலாக அங்கேயே சுண்டல் விற்றாலாவது பிரோயஜனம் இருக்கும் என்று வழக்கத்திற்கு மாறாக பொரிந்து தள்ளினார். எல்லாம் மோடி செய்த மாயம் என்று நினைத்துக்கொண்டு கப்ஸா நிருபர் இடத்தை காலி செய்தார். 

There are no comments yet