சென்னை: எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகள் லீலாவதி. இவர் எம்.ஜி.ஆர். சிறுநீரகம் பாதிப்படைந்து சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் வழங்கி உதவினார். எம்.ஜி.ஆர். லீலாவதி மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார். இன்று எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

எம்.ஜி.ஆரின் குடும்பத்தினர் நிலை என்ன என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் லீலாவதி இன்று காலையில் பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு சென்றார். அங்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். லீலாவதியுடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் பா.ஜனதாவில் இணைந்தனர்.

இது குறித்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: எம்.ஜி.ஆர் ஆட்சியை போல் சிறந்த ஆட்சியை மோடி நடத்திக் கொண்டிருக்கிறார். அதேபோல் தமிழகத்திலும் ஒரு நல்லாட்சி அமைய மோடியின் தலைமையை ஏற்க உள்ளேன். எம்.ஜி.ஆர். அண்ணன் மகள் லீலாவதி பாஜக வில் சேரும்போது, ஜெயலலிதா அண்ணன் மகள் நான் சேரக்கூடாதா. அது மட்டுமல்லாமல் இப்போது சின்னமாவிடமும், மோடியிடமும் தான் பணம் இருக்கிறது. திமுகவில் பணம் இருக்கிறது ஆனால் அவர்கள் செலவு செய்ய மாட்டார்கள். எனவே இப்போதைக்கு பணத்திற்கு பாஜக தான் சரியான கட்சி என்றார்.

There are no comments yet