சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம் சூடு பிடித்து தீயாய் எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. அதில் ஒன்று திமுக செயல் தலைவரின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக பீட்டா ஒருங்கிணைப்பாளர் என்பது தான்.

சமீபத்தில் தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் நமது கலாசாரத்துக்கு எதிராகவும், தேசவிரோத சக்தியாகவும் செயல்படும் பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் மத்திய விலங்குகள் நலவாரியத்தை கலைத்து, தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் புதியதாக உருவாக்குவதுடன், பீட்டா அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று என வலியுறுத்தி இருந்தார்.

இந்தநிலையில் ஸ்டாலின் குற்றம் சாட்டியதற்கு பீட்டா பதில் அளித்துள்ளது. இதுகுறித்து பீட்டா இந்தியா வெளியிட்டு உள்ள அறிக்கையில், பீட்டா அமைப்பு, சட்டத்தை உருவாக்கும் அமைப்பு அல்ல, சட்டத்துக்கு கட்டுப்பட்ட அமைப்பு. இத்தகைய விலங்குகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் மீது குறி வைப்பது மலிவானது. காளைகளை துன்புறுத்துவதை தடை செய்த மத்திய அரசின் சட்டங்களில் எங்களின் தலையீடு எதுவும் இல்லை. விலங்குகள் மீது ஒவ்வொரு இந்திய குடிமகனும் கருணை காட்டுவது கட்டாயம் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. எனவே, விலங்குகள் மீது கருணை காட்டுவதுதான் தேசபக்தி. அவற்றை துன்புறுத்துவது இந்தியத்தன்மை அல்ல. அந்த அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதித்துத்தான் விலங்குகளுக்கு சேவை புரிந்து வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து உதயநிதியை நமது கப்ஸா நிருபர் சந்தித்தபோது அவர் கூறியதாவது: எனக்கும் பீடா ரெம்ப பிடிக்கும், தினம் சாப்பிட்ட பிறகு ஒரு பீடா போடுவது எனது வழக்கம். இது என் தாத்தா கலைஞர் காலத்தில் இருந்து எங்கள் குடும்பத்தினர் கடை பிடிக்கிறார்கள். அவ்வப்போது எனக்கு என் அப்பா ஸ்டாலின் செலவுக்கு பணம் இல்லையென்றால் பேட்டா தருவார் அவ்வளவுதான், வேற ஏதும் எனக்கு தெரியாது ஆளை விடுங்கள் என்று ஜல்லிக்கட்டு காளை போல தெறித்து ஓடினர்.

There are no comments yet