உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் ,’ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினம் கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முந்திய வாரத்தில் இருந்தே தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் கிளர்ந்து எழுந்து வேலை வெட்டிக்கும் கல்லூரிக்கும் போகாமல் போராடி வருகிறார்கள். வீட்டில் ஃப்ரீயாக தண்ணி, சிகரெட் அடிக்க முடியாததால், கிடைத்தது சான்ஸ் என்று மெரினாவில் டேரா போட்டுள்ளனர். காலை தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது. அவர்களை கலைந்து செல்ல போலீசார் தொடர்ந்து வலியுறுத்தினர்.

கவுண்டமணி காமெடியில் வருவது போல் ஜல்லிக்கட்டு விவகாரத்தில், மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலங்காநல்லூரில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். பொங்கல் சமயத்தில் ‘காளை’ என்ற மொக்கைப் படத்தில் நடித்த நடிகர் சிலம்பரசனின் ஜல்லிக்கட்டு குறித்த பேட்டி வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக பிபிசி சி.என்.என். உட்பட டுபாக்கூர் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து, டி.ஆர். வீட்டு முன்பு கருப்பு சட்டை அணிந்து போராட்டம் அறிவிக்கப்பட்டது, ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை.இது குறித்து டி.ஆர். கப்சா நிருபரிடம் மெரினாவில் அளித்த பேட்டி, “அதிமுகவை கைப்பற்றி மன்னார்குடி மாஃபியா குடும்ப அரசியல் செய்கிறது. அது போல் சினிமாவை ரஜினி குடும்பம் மொத்த குத்தகைக்கு எடுத்துள்ளது, ரஜினி மருமகன் தனுஷ் பீட்டாவுக்கு ஆதரவாக உள்ளார், அவருக்கு போட்டி என் மகன் சிம்பு, சமீபத்திய பேட்டியில் ம. நடராசனே குடும்ப அரசியல் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளார், சசிகலா ஒரு போலி, பின்புலமாக ஆட்சி செய்வது நடராசன் தான். அதுபோல நாங்கள் ஏன் குடும்ப ஜல்லிக்கட்டு புரட்சி செய்யக் கூடாது? கதாநாயகியை தொடாமல் பத்தடி தள்ளி நின்று நடித்து ஹீரோவாக நடித்தவன் நான். தங்கச்சி கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தவன் ஆனால் என் மகன் ஜூனியர் ஆர்டிஸ்டை கூட கட்டிப்பிடித்து தான் நடிப்பான். அவனுக்குத்தான் காளையின் திமிலை பிடித்து துன்புறுத்தப்படும் ஜல்லிக்கட்டு பற்றி தெரியும், அப்படிப்பட்டவன் வந்து தமிழினத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டான், மறுக்க முடியவில்லை. என் வாயாலேயே மியூசிக் ரெக்கர்டிங் செய்துகொண்டிருந்த நான் அதை நிறுத்திவிட்டு, மானாட மயிலாட நிகழ்ச்சியையும் கேன்சல் செய்துவிட்டு காளையோடு ஜல்லிக்கட்டு விளையாட மெரினா வந்தேன். எனக்கு சல்லிக்காசு முக்கியமல்ல, ஜல்லிக்கட்டு தான் முக்கியம், லட்சம் முக்கியமல்ல, என்ன என்றே தெரியாத என் லட்சிய திமுகவின் அவலட்சணம் தான் முக்கியம் என்றபடி கடல் அலையில் கால் நனைத்தபடி அடுத்து எடுக்க்விருக்கும் 9 எழுத்து டைட்டில் கொண்ட உப்புமா படத்துக்கு பாடல் எழுத துவங்கினார்.

There are no comments yet