சென்னை: அறவழியில் நடைபெறும் இளைஞர் போராட்டம் நிச்சயம் வெல்லும் என நடிகர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என வலியுறுத்து தமிழகம் முழுவதும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம் நடந்து வருகிறது.சென்னை மெரீனா கடற்கரையில் முதல் 3 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில் இன்று 4-வது நாளில் வணிகர்கள், அரசு அலுவலர்கள், வழக்கறிஞர்கள், தொழிற்சங்கத்தினர், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தநிலையில் இளைஞர்களின் அறப்போராட்டம் நிச்சயம் வெல்லும் என நடிகர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, கமல் டாஸ்மாக்குக்கு ஆதரவாக ஊக்கம் கொடுக்கும் மதுவை கை விட வேண்டாம் என்று பொருள் படும்படி இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் என்று மெரினாவில் டாஸ்மாக் கடை வைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

There are no comments yet