சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இந்தக் கோரிக்கைகளை இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தெரிகிறது.

இந்த போராட்டத்தில் ஒரு கட்டமாக திமுக தலைவர் கருணாநிதி வீட்டிலேயே தனது மனைவிகளுடன் உண்ணாவிரதம் இருப்பதாக நம்பத்தகாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் மெரீனாவுக்கு செல்லவில்லை என்றாலும், தற்போது மெரினாவில் எழுச்சிமிக்க தமிழ் இளைஞர்களும், இளைஞிகளும் இருப்பதனால் எது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவே கலைஞர் வீட்டில் உண்ணாவிரதம் இருப்பதாக கலைஞருக்கு நெருக்கமான ஒரு உடன்பிறப்பு தெரிவித்தார்.

இதற்கிடையே நாளை அல்லது நாளை மறுநாள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து ஓடும் என்று தில்லியில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதை அடுத்து ஸ்டாலின் மற்றும் கலைஞரின் 2 மணி நேர உண்ணாவிரதமும் வாபஸ் வாங்கப்படுவதாக கோபாலபுர செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet