சென்னை: உடனடியாக என்னை முதல்வராக்காவிட்டால் சின்னம்மாவுடன் சேர்ந்து விடுவேன் என, மோடிக்கு தீபா மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நமது கப்ஸா நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: என்னிடம் பதவியும், பணமும் கேட்டு எனது ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். பணத்திற்கு எங்கே போவது, இதுவரை வந்த பெட்டிகள் கூட்டம் சேர்ப்பதற்கே காலியாகி விட்டன.

மோடி என்னை உடனடியாக முதல்வராக்குவார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றேன். எனவே, மோடி காலம் என்னை அழைத்து பேச வேண்டும், இப்போது அ.தி.மு.க.,வில் குழப்படி உள்ளது, நான் முதல்வராக இது தான் நல்ல நேரம், கணிசமான பணமும் பதவியும் கிடைக்கும். இந்த நேரத்தை கோட்டை விட்டால், ஓபிஎஸ் தனது பதவியை தக்கவைத்து கொண்டு விடுவார். சித்தப்பா எம். நடராசன் வேறு என்னை தனது பிள்ளை என்று கூறியிருக்கிறார், நீங்கள் நேரம் கடத்தினால், தங்களுக்காக நான் காத்திருக்க மாட்டேன்; சின்னம்மாவுடன் சேர்ந்து விடுவேன். எனவே, மோடிஜி உடனடியாக என்னை முதல்வராக்க வேண்டும் என்று கூறினார். ஜல்லிக்கட்டு பற்றி கேட்டபோது ‘அது முடிந்து போன விஷயம், ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே தெரியாத, டிஸ்கொ, பார் என்று செல்வ செழிப்பில் வளர்ந்தவள் நான், யாரிடம் என்ன கேள்வி கேட்கிறீர்கள்என்று சீறினார்.

There are no comments yet