சென்னை: தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன

இந்நிலையில் ரஜினி குடும்பத்தைச் சேர்ந்த தனுஷ், ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகிய மூவரும் பீட்டா அமைப்பில் உள்ளார்கள். எனவே அவர்கள் உடனே அந்த அமைப்பிலிருந்து விலகவேண்டும் என்று சமூகவலைத்தளத்தில் சிலர் கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து தனுஷ், ஐஸ்வர்யா, செளந்தர்யா மூவரும் கூட்டாக நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டி: பீட்டா அமைப்பு, சைவ உணவு சாப்பிடுகிறவன் என்கிற முறையில்எனக்கு விருதும், பணமும் கொடுத்தது. நான் சைவ ஆடு, சைவ கோழி தான் இப்போது சாப்பிடுகிறேன். பீட்டாவின் விளம்பர படங்களில் அவ்வப்போது நடிப்பதால், தினமும் பேட்டா கொடுக்கிறார்கள். அதை வைத்து தான் அரை வயிறு கஞ்சி குடிக்கிறேன். இந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை அதற்கும் வெட்டு வைக்க நினைக்கிறார்கள். என் மாமனார் ரஜினி போன்ற வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், தமிழன் என் சோற்றில் மண்ணள்ளிப் போட நினைப்பது நியாயமில்லை என்று தனுஷ் அழுது புலம்பினார்.  .

தனுஷுக்கு ஆதரவாக அவரது மனைவியும், ரஜினியும் மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் கூறும்போது முரட்டுக்காளை படத்தில் என் அப்பாவின் டூப் நடிகர் காளையை அடங்குவார், அதைத் தவிர எனக்கும் வேறு காளைகள் பற்றி தெரியாது என்றார். ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா: நம் கலாசாரத்தை எங்கள் குடும்பம் மதிக்கிறது. அதனால் தான் எனது இப்போதைய கணவரை டிவோர்ஸ் பண்ணிவிட்டு, இன்னும் நாலைந்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

There are no comments yet