சென்னை: சென்னை: ஜல்லிக்கட்டுக்காக துவங்கிய போராட்டம் தற்போது திசைமாறி வருவதாக வந்த தகவல்களை அடுத்து, நமது கப்ஸா நிருபர், பொறுத்தது போதும் பொங்கி எழு என்று மெரீனாவுக்கு காற்று வாங்க சென்ற போது, தமிழகத்தின் எதிர் காலமே, தன்னடக்கம் இன்றி அங்கங்கே தருதலைகளாய் நின்று கொண்டிருந்ததை பார்த்து வெட்கமும், வருத்தமும் அடைந்தார். அங்கங்கே நின்று கொண்டிருந்த இளஞர்களிடம் பேசிய போது கிடைத்த தகவல்கள்: பெரும்பாலானவர்கள் மாணவர்கள், சும்மா கூட்டமா வந்தோம் சார், இதுல ஒரு மஜா தான் என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த மாணவர்களை பயன்படுத்தி சில புல்லுருவிகளும், சமூக விரோதிகளும், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்த பின்னரும், இந்த போராட்டத்தில் பல தரப்பு நோக்கம் கொண்ட குழுக்கள் புகுந்துள்ளதாகவும்
தெரிகிறது. அவர்களை நதிகளை இணைக்க வேண்டும், சின்னம்மாவை முதல்வராக்க வேண்டும், குட்டி அம்மா தீபாவை அதிமுகவின் தலைவராக்க வேண்டும், திமுக தலைவர் கருணாநிதியை ஊழலற்ற நேர்மையா தலைவராக பார்க்க வேண்டும், கேப்டன் விஜயகாந்தை ஒரு நாளாவது ‘ஸ்டெடியாக’ பார்க்கவேண்டும் என்று கூக்குரலிட்டு, டான்ஸ் ஆடியும், தேச தலைவர்களை ஆபாச வார்த்தைகளில் திட்டுக்கொண்டிருந்தனர்.

ஒரு போராட்டக்குழு உறுப்பினர் பேசும் போது: நான் நாலு தடவ +2 பெயில் ஆயிட்டேன், எப்படியாவது அடுத்த முயற்சில பாஸ் பண்ற வரைக்கும் என் போராட்டம் ஓயாது என்றார். இன்னொருவர் சுதந்திரம் வாங்கி கொடுத்த மஹாத்மா காந்திய நான் இது வரை நேரில் பார்த்ததில்லை, அவர் இங்கு வரும் வரைக்கும் என் போராட்டம் தொடரும் என்றார். அவர்களுக்கு வாழ்த்து சொல்லி, நமது நிருபர் அங்கிருந்து அவரசமாக நடையை காட்டினார். மெரினாவில்இருந்து கீழ்பாக்கத்திற்கு இப்போது நேரடி பஸ் வசதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet