சென்னை: பல்லாயிரம் ஆண்டுகால தமிழினத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தற்கு காரணமே பீட்டா என்ற அமெரிக்கா தொண்டு நிறுவனம்தான். தமிழினத்தின் வீதிகள் தோறும் போராடும் இளைஞர்களின் முதன்மை கோரிக்கைகளில் ஒன்று பீட்டாவை தடை செய் என்பதுதான். பீட்டா ஆதரவாளரும் நாய் ஆர்வலருமான ‘விலங்குப் பெண்மணி’ என அன்போடு அழைக்கபடும் பாட்டி ‘ராதாராஜன்’ மீது சென்னை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் முன்னெடுத்துள்ள போராட்டதைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பீட்டா ஆதரவாளர் ராதா ராஜனின் வீட்டை தேமுதிக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். மாணவர்களின் தன்னெழுச்சியான இந்த அறப்போரட்டத்தை விலங்குகள் நல ஆர்வலரான ராதாராஜன் பிபிசி தமிழ் வானொலிக்கு அளித்த பேட்டியில், ”தற்போது தனி தமிழ்நாடு வேண்டும் என்று கேட்டால் 25000 பேர் வருவார்கள். ஆனால் இலவசமாக உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என ஒரு தலைப்பு வைத்தால் அதற்கு 50000 பேர் கண்டிப்பாக வருவார்கள்” என பேசியிருந்தார்.

இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு தமிழகமெங்கும், எதிர்ப்பலை நிலவி வருகிறது. ஆனால் ராதா ராஜன், தொடர்ந்து தமிழக மக்களுக்கு எதிராகவே பேசி வருகிறார். இதனால், ராதா ராஜனை கண்டித்தும் கோஷம் எழுப்புகின்றனர். இந்நிலையில் ராதா ராஜனுக்கு ஆதரவு தெரிவித்து குஷ்பு நமது கப்சா நிருபரிடம் கூறியதாவது, “நான் திருமணத்துக்கு முன் பெண்கள் பாதுகாப்பான உறவு வைத்துக் கொள்ளலாம் என்று கூறியதை அனைத்துப் பெண்களும் திருமணத்துக்கு முன் ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னதாக சண்டைக்கு வந்தவர்கள்தான் இந்த மீடியாக்காரர்கள். அட நான திருமணத்துக்கு முன் சினிமாவில் செய்ததை சொன்னேன். அவங்க பேரன் பேத்தி எடுத்தபின் பீட்டாவுல என்ன பண்றாங்களோ அதை சொல்லி இருக்காங்க, விலங்குகள் நல அமைப்பில் சேர்ந்து விலங்காவே மாறிடுச்சு பாட்டி, வயசான காலத்துல கோயில் குளம்னு தான் சுத்தணுமா என்ன, ப்ரீயா கிடைச்சா பினாயிலை கூட குடிக்கலாம். என்னைப் பொறுத்தவரை விலங்குகளும் பீட்டாவும் ஒரே இனம் தான். தெரியாமல் கள்ளத்தனமாக செய்தால் தப்பும் இல்லை, கிக்கும் அதிகம். திருமணத்துக்கு பின் உறவே வைத்துக் கொள்ளக் கூடாது என்று விவேக் சொன்னார் ஒருபடத்தில், அது திருமணத்துக்கு பின் உறவினர்களுடன் உறவே வைத்துக் கொள்ளக் கூடாது, தனிக்குடித்தனம் செல்லவேண்டும் என்று விளக்கமும் சொன்னார். அதுபோல தான் இதுவும், ஏற்கனவே விலையில்லா பரிசு பொருட்கள் வாங்கி பழக்கப்பட்ட மக்கள் விலையில்லா செக்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டால் மட்டும் கதறுகிறார்கள், பதறுகிறார்கள், ஒருத்தரை ஒருத்தர் தொடாமல் தான் பிள்ளை பெற்றார்களா? ” என்று கிளிசரீன் இல்லாமல் கண்ணீர் வடித்தார்.

பகிர்

There are no comments yet