சென்னை: மெரினா பீச்சில், ஜெயலலிதாவின் நினைவிடத்தை சுற்றிபார்க்க வந்த வெளியூர்காரர்களும், இறுதியாண்டு தேர்வுகளை மட்டம் போட ‘கிடைத்தது சான்ஸ்’ என்று பள்ளி கல்லூரி மாணவர்களும், கணவர், மாமியாருக்கு சமைத்துப் போடுவதில் இருந்து விடுதலை கிடைத்தது என்று குடும்ப பெண்மணிகளும் கட்டுச்சோறு, மீன்குழம்பு, கருவாடு சகிதம் ‘டேரா’ போட்டுக்கொண்டு, தமிழகத்தில் ‘ஜல்லிக்கட்டு’ தடை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்று கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். ஏற்கனவே தமிழக முதல்வர் அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளதால் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும், நானே வாடிவாசலை திறந்து வைத்து ஜல்லிக்கட்டுக் காளைகளை துள்ளி ஓட வைக்கிறேன் என்று மதுரை சென்றார். பொதுமக்கள் அவரை ‘தெறிக்க’ ஓடவிட்டதால் சுவற்றில் அடித்த பந்தாக சின்னம்மாவின் காலடியில் வந்து விழுந்தார்.
மாணவர்கள் போராட்டத்தை கைவிடாவிட்டால் நோக்கம் ‘பீச் காற்றில்’ திசை மாறிவிடும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். ‘எப்போது முடியும் இந்த படம்’ என்றே தெரியாமல் போய்க்கொண்டிருந்த வேளையில், இன்று காலையில் கடற்கரைக்கு வந்த காவல்துறை அதிகாரி பாலகிருஷ்ணன், அவசர சட்ட முன்வடிவை அளித்தார். மாணவர்கள் மத்தியில் பேசிய பாலகிருஷ்ணன், போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் கலைந்துசெல்லும்படி இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சட்டம், ஒழுங்கை பேணிக்காக்க அனைவரும் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு அளித்ததாக தெரிவித்தார். போராட்டக்காரர்களை தனித்தனியாக பிரித்த போலீசார் ஒவ்வொருவரையும் இழுத்துச் சென்று வலுக்கட்டயமாக வெளியேற்றினர். அப்போது காவல்துறையினர் கால்களை பிடித்துக்கொண்டு மன்றாடினர். பலரும் நகர மறுக்கவே அனைவரையும் கட்டி தூக்கிச் சென்று போய் சாலைகளில் விட்டனர். போராட்ட களத்தில் இருந்து வெளியேற மறுக்கும் பெண்கள், குழந்தைகளை பெண் போலீசார் வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்தி வெளியேற்றி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள், மாணவர்கள் கடல் அலை பகுதிக்கு சென்றுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. பின்னர் விசாரித்ததில், ஒருவார காலமாக குளிக்காதவர்கள் ‘ஸ்னானம்’ செய்ய சென்றுள்ளதாக தெரிந்துள்ளது. இதற்கிடையே குடியரசு தினத்தை தமிழகத்தில் திட்டமிட்டபடி நடத்த முடியாவிட்டால் மோடியிடம் ‘கடி’ வாங்கி கட்டிக்கொள்ள நேரிடும் என்று சின்னம்மாவும் சீப் மிக்சரும் கலங்கிப் போயுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
இது குறித்து கூட்டத்தில் புகுந்து கலகம் செய்யவந்த ஒரு ‘காவி’ வேட்டி நமது கப்சா நிருபரிடம் கூறியதாவது. ‘இத்தனை நாள் போராட்டம் நீடித்ததற்கு முக்கிய காரணம் ‘பேஸ்புக்-வாட்சப்’ போன்ற சமூக தளங்கள் தான் என்பதை மோடி தனது டிஜிட்டல் மூளையில் நேற்றுதான் டவுன்லோடு செய்து பார்த்துள்ளார், ஏற்கனவே ராகுல் காந்தியின் டுவிட்டர் ஹேக் செய்யப்பட்டு அவதூறு பரப்பியவர்களை தேடி ஒரு குழுவும், தமிழக அரசு வெப்சைட்டை முடக்கிய பாக் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க ஒரு ஸ்லீப்பர் செல்லும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த இரண்டு குழுக்களிடம் இருந்து யார் முதலில் மோடி செல்லுக்கு மெசேஜ் அனுப்புகிறார்களோ அவர்களை கொண்டு ஜன 26 காலை 11 மணி வரை அதாவது குடியரசு தின கொடியேற்றம் முடியும் வரை ‘பேஸ்புக்-வாட்சப்’ முடக்கி வைக்க வாய்ப்பளித்து பெரும் தொகை ரகசியமாக வழங்கப்படும் என்று மோடிஜி ரகசிய திட்டம் வைத்துள்ளார். இதை போராட்டக்காரர்களிடம் கூறிவிடாதீர்கள்” என்றார்.
There are no comments yet
Or use one of these social networks