சென்னை: இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இன்று அவர் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை எதிர்த்து கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அறப்போராட்டத்தில் சுவையே இல்லை, இதுவே எங்களது சிறுத்தைகள் போராட்டம் நடத்தியிருந்தால் பத்து பதினைந்து பஸ்கள் எரிக்கப்பட்டிருக்கும். கடைகள் உடைக்கப்பட்டு பொது, தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்த ஐடியா இவர்களுக்கு இல்லாமல் போனது வருந்தத்தக்கது.

மத்திய அரசின் ஒப்புதலோடு தமிழக அரசு தற்போது அவசர சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது மிகவும் தவறு. தமிழக அரசு விரைந்து செயல்பட்டிருக்க கூடாது. இன்னும் கொஞ்சம் காலம் தாழ்த்தி இருந்திருந்தால் போராட்டம் இன்னும் சூடு பிடித்திருக்கும். பன்னீர் செல்வம் அவசரப்பட்டு விட்டார். உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் இந்த சட்டம் செல்லாதென உடனே அறிவிக்க வேண்டும். அப்போது போராட்டக்குழு என்ன செய்கிறது என்று பார்க்க நன்றாக இருக்கும்.

அது மட்டுமல்லாமல், நான் முன்பு சொன்ன மாதிரி எங்களை பின்பற்றி, போராட்டக் குழு நாலைந்து பஸ்கள் எரிக்கப்படும் வரையிலும், கடைகள் உடைக்கப்பட்டு பொது, தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்படும் வரையிலும் போராட்டத்தைத் தொடர வேண்டுமன மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கேட்டுக் கொள்கிறோம் போராட்டக் குழுவினருக்கு அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்கள் வேண்டுமானால் சொல்லுங்கள் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று நான் வருகிறேன் ‘ என்று கூறி எனக்கு இனிமேல் தான் நிறைய .வேலையிருக்கிறது என கிளம்பினார்

There are no comments yet