சென்னை: மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் இன்று ஜன 23 காலை வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இதனால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மெரினாவிலிருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. இது குறித்து நடிகர் கமல்ஹாசன் “தமிழகத்தில் அமைதி காக்க வேண்டியது அனைவரின் கடமை” என நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் புரிந்துவிடக் கூடாத தமிழில் அவர் பதிவிடாத கருத்தில் கூறியிருப்பதாவது: “யார் ஒருவர் கண்ணியம் தவறினாலும் அது சங்கமித்திருக்கும் அனைவரையும் பாதிக்கும். வாழ்த்துக்கள் விமர்சனமாகாதிருக்க ராதாராஜன் போன்றோரின் விரசக் கேலிகளை தவிர்க்கவும். அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில், என் படங்களில் வரும் வன்முறைக் காட்சிகளில் வருவது போன்ற, பெரிய ரத்தக்கறை. இதுவரை காத்த அறத்தை கைவிடாதீர்.

வன்முறை செய்வது மாணவர்களாக இருக்கக் கூடாது சுப்பிரமணியன் சுவாமி சொன்ன பொறுக்கிகளாக இருக்க வேண்டும். இதுவரை பொதுச்சொத்திற்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது. இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும்.செய்யும். ஹேராமில் கோட்சேவாக நடித்தேன், அந்த வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸையை அழிப்பதுதான். அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல. ரத்தமும் முத்தமும் சினிமாவைபோல் அரசியல் வாழ்க்கைக்கு முக்கியம். எனவே எனது விஸ்வரூபம் வெளியாக இருப்பதாலும், நண்பர் ரஜினி மலையாள ஜோதிடர் மூலம் ‘அசாதாரண’ சூழ்நிலையை முன்பே கணித்துவிட்டார், எனக்கு சொல்லியும் விட்டார் அதனால் மெரினா பக்கம் போகாமல் கல்லடியில் இருந்து தப்பித்துக் கொண்டேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரஜினி பற்றி கூறுகையில், ஒரு வாரம் கஜினி சூர்யாவாக “ஷார்ட் டைம் மெமரிலாஸ்” நோயாளியாக இருந்தவர் மீண்டும் நான் வந்து ‘எடுத்துக்’ கொடுத்ததும் மீண்டும் ரஜினிகாந்தாக மாறினார், இன்னும் பல ஆண்டுகளுக்கு ரப்பர் மேக்கப் போட்டு பேன்சி ட்ரஸ் காண்டெஸ்ட் போல சினிமாவில் நடித்து ரசிகனின் பணத்தை கறக்க என் முகத்தை பாதுகாத்து வருகிறேன். அதில் கல்லடி பட்டு டொக்கு விழாமல் ‘அசாதாரண’ சூழ்நிலையை முன்பே கணித்த நண்பர் ரஜினிக்கு போத்தீஸ் விளம்பரத்தில் சம்பளமாக வாங்கிய ‘போட்டுக் கழற்றிய’ ஒரு பழைய ஜிப்பாவை பரிசளித்தேன்” என்றார்.

பகிர்

There are no comments yet