சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பைத் தடை செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கடந்த 6 நாள்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை அறிவித்திருந்தார். ஆனால், காளைகளை காட்சிப்படுத்தப்படாத விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்குவது, ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் இயற்றினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவதாக போராட்டக்காரர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை அணுக இருக்கின்றன விலங்குகள் நல அமைப்புகள், அப்போது எமனின் வாகனமான எருமையையும் காட்சிப்படுத்தப்படாத விலங்குகள் பட்டியலில் சேர்க்க உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளனர்.

இந்திய விலங்குகள் நலவாரிம், பீட்டா மற்றும் புளு கிராஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறும்போது: எருமை மாடானது நல்ல அதிக கொழுப்புச் சத்துள்ள பால் மட்டுமன்றி இறைச்சி மற்றும் வேளாண் வேலைகளுக்கும் பயன்படுகிறது. எல்லா வளர்ப்பு மிருகங்களிலும் எருமை மாடுகளே அதிக உற்பத்தி தரக்கூடியவை. எனவே தான் எருமை மாடு வளர்ப்பு சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு எருமை மாடு வளர்ப்பு சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இந்துக்களின் கடவுளான எம ராஜாவின் வாகனம் எருமை தான். முன்பு ஒருமுறை காங்கிரஸ் தலைவர்கள் கூட நரேந்திர மோடி வெள்ளைக் குதிரையில் பவனி வருபவர் அல்ல, அவர் எருமை மீது சவாரி செய்யும் எமன் என்று கூறியுள்ளனர். எனவே இத்தனை சிறப்புடைய எருமையை உடனே காட்சிப்படுத்தப்படாத விலங்குகள் பட்டியலில் சேர்க்க வலியுறுத்த உள்ளோம். தனது வாகனமான எருமையை பாதுகாக்க மோடி எங்களுக்கு ஆதரவு தருவார் நின்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று கூறினார்.

There are no comments yet