சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா கட்சியை வழி நடத்த வேண்டும் என்று ஏராளமானோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு மாநிலம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக சென்று ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றும் தி.நகரில் உள்ள தீபா வீட்டுக்கு ஏராளமான தொண்டர்கள் சென்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். தீபா தனது ஆதரவாளர்களுடன் ரகசிய கூட்டத்தை, சென்னை, அயனாவரத்தில், நேற்று நடத்தினார். இக்கூட்டத்தில், தீபாவும் அவரது கணவர் மாதவன் மட்டும் கலந்து கொண்டதாக தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் முன்பு ஜெயலலிதாவின், 69வது பிறந்த நாளன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் கட்சி துவங்குவது என, முடிவு செய்ததை மாற்றி ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்களா தினத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட ஆலோசனைக்கு பிறக்காது,தீபா நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் அன்று, தீவிர அரசியலில் குதிப்பதாக அறிவித்தேன். தன் அரசியல் பயணம் குறித்த, அடுத்தகட்ட நடவடிக்கையை, ஜெ., வின் பிறந்த நாளான, அடுத்த மாதம், 24ல் அறிவிப்பதாகத் தெரிவித்தேன் . இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் நல்ல பாடம் கற்பித்துள்ளது. அதனால் ஊரெங்கும் கலவரமாகி, எனக்கு இப்போது கட்சி ஆரம்பிக்க நிலைமை சாதகமாக இல்லை. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஜெயலலிதா பிறந்த நாளான, பிப்., 24ல், புதிய கட்சி துவக்குவது என்ற முடிவை ஒத்திப்போட்டு, எனது ஆதரவாளர்களுக்கு பொருத்தமான ஏப்ரல் 1-ம் தேதியில் கட்சி துவங்குவது என்ற முடிவில் இருக்கிறேன். அம்மா அதிமுக என பெயரில் ஏற்கனவே கட்சி ஆரம்பிக்கப்பட்டு விட்டதால் வேறு பெயரில் தான் ஆரம்பிக்க வேண்டும். என் அத்தை ஜெயலலிதாவை நான் எப்போது ஆண்டி என்று தான் அழைப்பேன். எனவே ஆண்டி திமுக என்றபெயரில் புதுக்கட்சி ஆரம்பித்து எனது ஆதரவாளர்களை ஆண்டியாக்க உள்ளேன் என்று உற்சாகமாக சொன்னார்.

தீபாவின் கணவர் மாதவன் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், புதிய கட்சி துவக்குவது, உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து நானும் தீபாவும் விவாதித்தோம். கட்சியின் தலைமை அலுவலகத்தை, சென்னை, கோயம்பேட்டில் திறக்க திட்டமிட்டு உள்ளோம். அது பிரதமர் மோடி வந்து திறந்து வைக்க கேட்டுள்ளோம். பிப்ரவரி முதல் வாரத்தில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வது என்றும், அதன்பிறகு முக்கிய முடிவுகள் எடுப்பது என்றும் தீர்மானித் துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

There are no comments yet