சென்னை: மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்களை காவல்துறை தாமாக முன்வந்து கலவரம் உண்டுபண்ணி, கண்ணியமான முறையில் வீடுகள், இருகக்கர வாகனங்கள், ஆட்டோ முதலிய பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து வேலியே பயிரை மேய்ந்தது போல் கலவர கதகளி ஆடி போராட்டத்தை முடித்து வைத்தனர். இந்த விவகாரத்தை வைத்து விளம்பரம் தேடும் முயற்சியில் பல ஈடுபட்டுள்ளனர், அவர்களுள் ஒருவர் கமல்.

சில நாட்களுக்கு முன்பிருந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து ட்வீட் செய்த கமல், இன்று கப்ஸா நிருபரைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த விவகாரத்தில் சின்னம்மாவுக்கு பயந்த தமிழக முதல்வர் தன்னால் முடிந்ததைச் செய்திருக்கிறார். காவல் துறை சிறப்பாக வெறியாட்டம் ஆடி இருக்கிறது, அடுத்து எடுக்கவிருக்கும் படங்களில் கலவர காட்சிகளுக்கு நல்ல ரெபரன்ஸ் மெட்டீரியல் கிடைத்துள்ளது. அதற்கு என் முதற்கண் நன்றி. கன்னியும் வாழ வழி செய்வோம், காளையும் வாழ வழி செய்வோம் என்ற பிறகு, சில வாரங்களாக என்னுடன் ‘தொடர்பில்’ இருக்கும் த்ரிஷா கேட்டுக் கொண்டதால், பீட்டாவைத் தடை செய்ய வேண்டாம். பிறகு வேறு பெயரில் அவர்கள் வருவார்கள்.

‘சண்டியர்’ என்று ஆரம்பித்து ‘விருமாண்டி’ என் நான் கேவலமான ஜெயில் கலவர காட்சிகளுடன் படம் எடுத்த வெளிவரவில்லையா?. விலங்குகளுக்கு ஒரு அமைப்பு வேண்டும். ராதா ராஜன் போன்ற ‘விலங்குப் பெண்மணிகளுக்கும்’ ஒரு அமைப்பு வேண்டும், காளையை பட்டியலில் இருந்து நீக்கியது போல், காவல் துறையை காட்சிபடுத்தாத விலங்குப் பட்டியலில் சேர்க்க வேண்டும். பீட்டா தங்கள் செயல்களை முறைப்படுத்த வேண்டும். பிரியாணிக்கும் ஒரு அமைப்பு வேண்டும், இல்லாவிட்டால் லெக் பீஸ் அனைவருக்கும் கிடைக்காது. எனது மகள் ஸ்ருதி வெளிநாட்டு குளிர்பான விளம்பரங்களில் நடிக்கிறார், போதாக் குறைக்கு விஜய்யுடன் ‘புலி’ சூர்யாவுடன் ‘சிங்கம்’ என வனவிலங்குகளில் பெயர் கொண்ட படங்களில் நடிக்கிறார், அது தடைப்பட்டால் அவள் வருவாய் பாதிக்கும். என்னைப் போல விலங்கு நல ஆர்வக்கோளாறுகள்/ஆர்வலர்கள் கண்டிப்பாகத் தேவை பீட்டாவும் வாழ வேண்டும், சினிமாவில் சூட்டிங் முடித்ததும் தினசரி வழங்கும் பேட்டாவும் வாழ வேண்டும்” என்றார்.

பகிர்

There are no comments yet