புதுடில்லி : குடியரசு தினத்தை முன்னிட்டு 2017 ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகளுக்கு மொத்தம் 1730 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இவர்களில் தேர்வு செய்யப்பட்டு, விருது பெறும் 150 பேர் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தலா 7 பேருக்கு பத்ம விபூஷண் மற்றும் பத்ம பூஷண் விருதுகளும், 75 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 19 பேர் பெண்கள். வெளிநாட்டை சேர்ந்த 5 பேருக்கும். இறந்தவர்கள் 6 பேருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் பாராலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு, 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார். மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக அரசு சார்பில் அப்போதய முதல்வர் ஜெயலலிதா ரூ.2 கோடியை பரிசாக அறிவித்தார். டிச.23 தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார் மாரியப்பன். அப்போது தன்னுடைய தங்கப்பதக்கத்தை காண்பித்தார். அதை வாங்கி ஜெயலலிதா படத்தின் முன்பாக மாரியப்பனின் கழுத்தில் அணிவித்தார் ஓ.பன்னீர் செல்வம். இதனையடுத்து ரூ.2 கோடிக்கான காசோலையை முதல்வர் வழங்கினார். ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ரூ. 2 கோடியை பெற நினைத்த மாரியப்பனுக்கு ஜெயலலிதா படத்தின் முன்பாக அவரை சாட்சியாக வைத்து நிதியை வழங்கினார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். இது பழைய செய்தி.

ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது கிடைக்கும் என்று காத்திருந்த சின்னம்மா, தற்போது மத்திய அரசு அதை விடுத்து, 21 வயது மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி உள்ளதை தனது அரசியல் விளம்பரதுக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நமது கப்ஸா நிருபருக்கு கிடைத்த தகவல் படி புதியதாக ‘பத்மசின்னம்மா’ விருதுகள் தோற்றுவிக்கப்பட்டு மாரியப்பன் மற்றும் அம்மாவின் விசுவாசி மறைந்த ‘சோ’ உள்ளிட்டோருக்கும், கட்சியில் நன்றாக குனிந்து கொடுக்கும் கூழைக்கும்பிடு ‘கூன்பாண்டியங்களுக்கும்’ வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதையறிந்த ஓ.பி.எஸ். விசுவாசிகள் கலக்கத்தில் உள்ளதாக கார்டன் பட்சி ஒன்று கூறுகிறது

பகிர்

There are no comments yet