புதுடெல்லி: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் டெல்லியில் விழா நடைபெற்றது . இதில் 2016 ம் ஆண்டிற்கான ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.

கடந்த 2016–ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், ஜெயலலிதா மறைந்த பின்னர் தமிழத்தில் ஏற்பட்ட சிக்கலான நேரத்தில் சின்னமாவுக்கு உற்ற துணையாக இருந்து பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற உதவி செய்தமைக்கும் மின்னணு ஊடகமாக தந்தி டிவி தேர்வு செய்யபட்டது. தேசிய ஊடக விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து, தந்தி டிவி நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பெற்று கொண்டார்.

இது குறித்து மேலும் விபரமறிய தந்தி டிவியின் செய்தி ஆசிரியர் ரெங்கநாத் பாண்டேயை நமது கப்ஸா நிருபர் தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது: ஓட்டுக்கு பணம் வாங்க வாங்கிக்கொண்டு அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் தந்தி டிவிக்கு பெரும்பங்கு உண்டு. காரசார அரசியல் செய்திகள், விவாதங்கள் என தொடர்ந்தாலும், சின்னம்மாவுக்கு ஆதரவாக உள்ளவர்களை அழைத்து பேசவைத்து மக்களை மூளை சலவை செய்யும் பல்வேறு செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் வழங்கியது. மேலும் ஆயுத எழுத்து, மக்கள் மன்றம் மற்றும் மக்கள் யார் பக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் அரசியல் நிகழ்வுகளை நேரடியாக அதிமுக சார்பில் மக்களிடையே கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. இதுவே மக்களிடம் பெரும் வரவேற்பை பெற உறுதுணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சின்னம்மாவின் ஆசி இருக்கும் வரை எங்களுது இந்த சேவை தொடரும் என்றார்.

There are no comments yet