புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து ‛சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதல் நடத்திய 22 ராணுவ வீரர்களுக்கு ராணுவ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தின் 4 பாரா படைப்பிரிவின் மேஜர் ஒருவருக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 வீரர்களுக்கு சவுரிய சக்ரா விருது, 4 மற்றும் 9வது பாரா சிறப்பு படையின் காமண்டர்களுக்கு யுத் சேவா விருது, 14 வீரர்களுக்கு சேனா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் சர்ஜிக்கல் ‘ஸ்டிரைக்’ நடத்திய ராணுவ வீரர்களுக்கு விருதுகள் கொடுப்பது தவறானது என்று கூறியதாக வந்த செய்தியையே அடுத்து கேப்டனை நமது கப்ஸா நிருபர் சந்தித்தபோது கேப்டன் கூறியதாவது: ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழக மக்களை பசியிலும், பட்டினிக்கும் ஆளாக்கிய மோடிக்கு எனது கண்டனங்களை தெரிவிக்கிறேன்.யாரவது ‘ஸ்டிரைக்’ செய்தால் ஒன்று அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் அல்லது அவர்களை வேலையை விட்டு தூக்க வேண்டும். ஆனால் சர்ஜிக்கல் ‘ஸ்டிரைக்’ நடத்திய ராணுவ வீரர்களுக்கு விருதுகள் கொடுப்பது என்பது மோடியின் சர்வாதிகார ஆட்சியில் மட்டுமே நடக்கும். இது ஒரு தவறான முன்னுதாரணமாகும், இதற்க்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks