சென்னை: ஆட்சியில் இல்லாவிட்டாலும், ஏதவது ஒரு காரணம் சொல்லி கூட்டம் கூட்டுவதும், கடந்த ஆட்சியில் மக்களிடம் உருவிய பணத்தில் நலத்திட்டம் என்ற பெயரில் சோப்பு டப்பா, வெற்றிலை பெட்டி வழங்கி தங்கள் இருப்பை நிலை நாட்டிக் கொள்வது திமுக வழக்கம். தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் சிவானந்தாகாலனியில் நடந்தது.அப்போது செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு 1965-ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டமும் காரணமாக இருந்தது. கடந்த ஒருவார காலமாக தமிழக கலாசாரத்தை, பண்பாட்டை காப்பாற்றுவதற்காக ஜல்லிக்கட்டை முன்வைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்று இருக்கிறார்கள். இதுபற்றி பேச வேண்டும் என கடந்த 23-ந்தேதி சட்டமன்றம் கூடிய போது நாங்கள் முயன்றோம். ஆனால் அனுமதி தரவில்லை. வழக்கம்போல் வெளிநடப்பு செய்தோம். தற்போது ஏற்பட்டுள்ள மாணவர்களின் எழுச்சி நமக்கு அந்த தீர்மானத்தை நினைவுபடுத்துகிறது. கலைஞர் காலத்திலேயே தமிழ்மொழி மத்திய ஆட்சி மொழியாகி விடும் என்ற நம்பிக்கை இப்போது வந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்காக தி.மு.க. சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடத்தினோம். அப்போது மாணவர்கள் சிலர் அங்கு வந்து வாழ்த்தி பேசினார்கள். அப்போது மாணவர்கள் நடத்திய போராட்டத்தை நினைவு கூறும் வகையில் மெரினாவில் நினைவுச்சின்னம் அமைக்க துணை நிற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதை ஆட்சியாளர்கள் தான் செய்ய வேண்டும். செய்ய தவறினால் அடுத்து தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மெரினாவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றார்.

கூட்டத்தை முடித்து விட்டு வெளிய வந்த ஸ்டாலினை கப்ஸா நிருபர் கப்பென்று பிடித்து எடுத்த் பேட்டியில் ஸ்டாலின் கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: தமிழகத்தின் முதல் முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர் அண்ணாதுரை, அவருக்கு, மெரினாவில் நினைவிடம் உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவருக்கும் ஒரே இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால் என் அப்பா கலைஞருக்கு அதிமுக ஆட்சியில் கண்டிப்பாக இடம் கிடைக்காது என்பது தெள்ளத்தெளிவு. அதனால் தான் ஜல்லிக்கட்டு மாணவர்களுக்காக மெரினாவில் நினைவு சின்னம் அமைப்பதாக சொன்னேன், உதயசூரியனை கொஞ்சம் எடிட் செய்து, இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு காளை சீறிப் பாய்வது போல் அமைக்கப்படும் நினைவுச்சின்னத்தில் தமிழ் ஈன காளை கலைஞர் பெயரை பொறித்து விடுவோம். வீடுகட்ட வேண்டுமென்றால் ‘முதலில் நிலத்தை வாங்கோணும், பின்னர் அதை தோண்டோணும், பிறகு கட்டோணும்’ என்பது போல், இதை எல்லாம் இந்த மெரினா நினைவு சின்ன ஆசை நிறைவேற ‘தேர்தல்ல நிக்கோணும், ஜெயிக்கோணும், பிறகு கட்டோணும்” என்று அங்கலாய்த்தார்.

பகிர்

There are no comments yet