சென்னை: ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கேட்டு மாணவர்கள், ஐ.டி. ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர், சென்னை மெரினா கடற்கரையில் அறவழியில் போராட்டம் நடத்தினர். போராட்டாத்தின் முடிவில் போலீசாரே ஆட்டோ, குடிசை இரு சக்கர வாகனங்கள் முதலியவற்றை தீ வைத்து, வன்முறையை தூண்டி தடியடி நடத்தி ‘முடித்து’ வைத்தனர். இதனால் ஸ்டாலின், வைகோ, முத்தரசன் உள்ளிட்டோர், தமிழக அரசு மீது குற்றம் சாட்டினர். தவறு செய்த காவல் துறையினர் மீது, சஸ்பெண்ட், சிறைத்தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் வழக்கம்போல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுக செயலற்ற தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் தனது தலையாய பணியான வெளிநடப்பை செய்தார்.

இது குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் விளக்கமளித்தார். அப்போது “போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் ‘ஒசாமா பின் லேடன் படம் வைத்திருந்தனர், சிலர் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து தனித் தமிழ்நாடு கோரிக்கை வைத்தனர். ஒருபடி மேலே போய் “சற்றுமுன் ஓபிஎஸ் மரணம் என்று பதாகைகள்” வைத்திருந்தனர்” குடியரசு தினத்தை புறக்கணித்து கறுப்பு தினமாக அறிவிக்க வெண்டும் என்றும் கோஷமிட்டனர்” என்று தெரிவித்தார். இது குறித்து சட்டசபைக்கு வெளியே ஓபிஎஸ் அளித்த ‘ஆப் த ரெக்கார்டு’ பேட்டி. “கலவரம் நடைபெறும் நாளுக்கு முந்தின நாள் மாலையே எங்களுக்கு திமுக மீது சந்தேகம் வந்து விட்டது. திட்டமிட்டபடி திமுகவினர் மீது தடியடி நடத்த சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தோம், மறுநாள் விடிந்ததும், போலீசை விட்டே கற்களை வீசி போராட்டத்தில் வன்முறையை தூண்டி விட்டோம். நடுக்குப்பத்தில் சில திமுகவினரின் நல்லி எலும்பை பதம் பார்த்தோம். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தை தீக்கிரை ஆக்கினோம்.

சில மாதங்களுக்கு முன்பு போட்டி சட்டசபை நடத்தி அவை நடவடிக்கைகளை கிண்டல் செய்த திமுகவினர், இந்தமுறை போட்டி வன்முறை வெறியாட்டம் நடத்த திராணியில்லாமல் தெறித்து ஓடினர். ஸ்டாலின் வேறு அடிக்கடி ஜெயலலிதா ஒரு இரும்பு பெண்மணி என்று கூறி என்னை ‘தகரடப்பா முதல்வர்’ என வஞ்சப்புகழ்ச்சியில் சாடி வருகிறார். “ஸ்டாலின் எலி ஏன் இப்படி அம்மா புகழ் பாடி அடிக்கடி அம்மணமா ஓடுது” என்று எனக்கு நல்லாவே தெரியும்’ ஒசாமாபின் லேடன் படமா, பெரியார் படமா, அல்லது ஜக்கி வாசுதேவின் படமா என்று தெரிந்து கொள்ள, புகைப்படங்களை குற்றப் புலனாய்வு துறைக்கு அனுப்பியுள்ளோம். விவரம் கிடைத்தபின் அதற்கேற்ப மீண்டும் ‘தடியடி’ தாக்குதல் தொடரும். குடியரசு தினத்தன்று மக்கள் மெரீனாவுக்கு வராததால் தடியடி தாக்குதல் நடத்த தயாரயிருந்த ஏவல் துறையின கொஞ்சம் ஏமாந்து விட்டனர் என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet