சென்னை: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தி.நகரில் உள்ள தீபா வீட்டு முன்பு ஆதரவாளர்கள் குவிந்து வந்தனர். அவர்கள் மத்தியில் தீபா பேசினார்.
தமிழகம் முழுவதும் தீபா பேரவை தொடங்கபட்டு உறுப்பினர் சேர்க்கும் பணியும் நடந்தது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளான கடந்த ஜனவரி 17-தேதி தனது வீட்டில் பேட்டியளித்த தீபா, ஏப்ரல் 1-ம் தேதி அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பேன் என்று தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை சந்திப்பேன் என்றும் கூறினார்.
இந்த நிலையில் சில மாவட்டங்களில் தீபா பேரவையில் சேர பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து தீபா வீட்டு முன்பு ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், பொறுப்புகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. இது சம்மந்தமாக யாரையும் அனுக வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நமது கப்ஸா நிருபரிடம் கூறிய தீபா: என்னை பற்றி வரும் வதந்தி களை நம்ப வேண்டாம். நான் அரசியலுக்கு வருவது உறுதி. மோடியிடம் கொஞ்சம் பெட்டிகள் தான் வாங்கினேன். எனது சின்ன அத்தை , அதாவது உங்கள் சின்னம்மாவுடன் பேரம் நடந்துகொண்டிருக்கிறது. .அது முடிந்த பின்தான் அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பேன். சில மாவட்டங்களில் தீபா பேரவையில் சேர பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளது. எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது. பணத்தை வேறு யாரிடமும் கொடுத்து ஏமாறாதீர்கள், நான் நேரில் வந்து பெற்றுக்கொள்கிறேன். இப்போது தமிழகம் முழுவதும் சாலைகளில் வேகத்தடை போட்டு எனது பயணத்தை நிறுத்தவும், தடுகக்வும் சின்னம்மா முயற்சி செய்வதாக எனது ஆதரவாளர்கள் சொன்னார்கள். தடைகளை தகர்த்தெறிவோம்,” என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஒரு தீபா ஆதரவாளர்: குட்டி அம்மாவுக்கு யாராவது தமிழை முதல்ல சொல்லிக்கொடுக்க வேண்டும். அறிவிப்பில் “யாரையும் அனுக வேண்டாம்” என்று எழுதியிருக்கிறார். இவர் வந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்று இவர் வீட்டு முன்பு கூட்டம் சேருவது தமிழனின் தலைவிதி என்று தன்னை நொந்துகொண்டார்.
There are no comments yet
Or use one of these social networks