சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டத்துக்கு கமல் ஆதரவு அளித்தார். அப்போராட்டத்துக்கு நேரில் ஆதரவு அளிக்கவில்லை என்றாலும், தொடர்ச்சியாக அப்போராட்டம் தொடர்பான நிகழ்வுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வந்தார். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நிறைவுக்கு வந்தவுடன், தனியாக பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துரைத்தார் கமல். அப்பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடர்ந்து “கமல். அரசியலுக்கு வர வேண்டும்” என்று பலரும் சமூக வலைதளத்தில் குரல் கொடுக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் இது குறித்து கமல், “கேள்.. தோழனே, நண்பனே, ஆசானே, மூடபக்தனே. உன்னுடன் நிற்கத்துணிந்த எனை அரசியல் தலைவருடனா சேரச்சொல்வாய்?. எப்பிழை செய்தேன் இவ்விகழ்வெனைச்சேர? நொந்தேனடா” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாணவர்களாகிய உங்களுக்கு துணையாக இருந்ததிற்கு என்னை அரசியலில் சேரச் சொல்கிறீர்களே. இந்த மாதிரி நீங்கள் நினைப்பதற்கு நான் என்ன தவறு செய்தேன். மனசு வேதனைப்படுகிறேன்” என்பதை கமல் சுருக்கமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து கமலின் ரசிகர் ஒருவர் நமது கப்ஸா நிருபரிடம் கூறும்போது : என் தலைவர் கமல் எடுக்குற படம்தான் புரிலனு பாத்தா, வர வர அவர் பேசறதே புரிய மாட்டேங்கிறது. அவர் வெளியிடும் ட்விட்களை புரிந்து கொள்ள, தனியா ட்யூசன் வைக்க வேண்டும் போல் இருக்கிறது என்று கூறினார். மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஓபிஎஸ் கையாண்ட விஷயத்தில், கமல் அரசையும், ஓபிஎஸ் அவர்களையும் விமர்சித்தார். இன்னும் திறமையாக செயல்பட்டிருக்கலாம் என்று கூறினார். இதைப்பார்த்த திமுகவினர் இது தான் சமயம் என்று கமல் அரசியலுக்கு வரவேண்டும், திமுகவில் சேரவேண்டும் என்று குரல் கொடுத்தனர். இதையடுத்து இந்த டிவீட்டை வெளியிட்டு ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் முகத்தில் அறைந்தாற்போல் பதிலடி கொடுத்துள்ளார் என்று அவரது அர்த்தத்தை கூறினார்.

There are no comments yet