சென்னை: “கலைஞர் நினைவு இருந்தும், நினைவு இல்லாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்” என நிகழ்ச்சியொன்றில் பேசிய வைகோ, தொடர்ச்சியாக கிளாடியேட்டர் என்ற ஹாலிவுட் படத்தில் படத்தின் காட்சியைச் சொல்லி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

அவர் மேலும் கப்சா செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழக அரசியலில் தெளிவற்ற நிலை நிலவுகிறது. இதை தான் ரஜினி முன்பு ‘அசாதாரண’ நிலை என்று சொன்னார். என்னை வாழ வைத்த அம்மா ஜெயலலிதா மறைந்துவிட்டார். என் அரசியல் ஆசான் கலைஞர், நினைவு இருந்தும், நினைவு இல்லாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு கோபாலபுரத்தில் கல் உடைத்துக் கொண்டிருக்கிறார்.. வழக்கம்போல் என் ரத்தம் கொதிக்கிறது. பிபி அதிகமாவிட்டது என்று நினைக்கிறேன். கிளாடியேட்டர் திரைப்படத்தில் தன்னுடைய தந்தையிடம் மகன், தன்னை அரசனாக்கிட கோரிக்கை வைப்பார். அப்போது தந்தை, ‘உனக்கு தலைமை ஏற்கும் பண்புகள் இல்லை’ என மறுத்து விடுவார். அதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்யவார். அந்தக் காட்சியை ஸ்டாலின் சமீபத்தில் ஸ்டார் மூவீசில் பார்த்ததாக ரகசிய பட்சி ஒன்று என்னிடம் கூறியது. அதற்காக இதை இதோடு தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டாம்.

நான் இந்த உண்மையை புலனாய்வு செய்யவும் கலைஞரை நேரில் சந்த்தித்து விபரமறியவும், காவேரி மருத்துவமனைக்கு சென்றபோது செயல் தலைவர் திட்டமிட்டு செருப்பு வீசி தாக்குதல் நடத்தினார். செருப்பு அளவு செட் ஆகாததால் கோபித்துக் கொண்டு திரும்பி வந்து விட்டேன். தி.மு.க.வில் தலைவர் பதவி இல்லை என அண்ணா பெரியாரிடம் சொன்னார். ஆனால் அண்ணா மறைந்த பிறகு அதை உடைத்தவர் கருணாநிதி, அண்ணன் கலைஞர், ஆட்சியைக் கைப்பிடிக்க எதையும் செய்ய துணிந்தவர். அந்தத் திறமை, செயல் தலைவருக்கு சுட்டுப் போட்டாலும் வராது. அதனால் தான் எண்ணெய் செக்கு உலக்கை போன்று இருந்த வைரம் போன்ற கலைஞரின் 18வது நரம்பை கட் செய்து அவரை சேது விக்ரம் போலாக்கி, செயலிழக்க செய்து வீட்டுச்சிறையில் கல்லுடைக்க வைத்துள்ளார். கையில் கொப்புளம் வந்தது கூட இதனால் தானோ என்னவோ? அம்மா மரணத்தில் திரைமறைவு நாடகம் நடத்திய சின்னம்மா போல் அய்யா கலைஞனர் விஷயத்தில் மர்மமான முறையில் காய் நகர்த்தி வருகிறார் ஸ்டாலின்.

கடைசி மூச்சு உள்ளவரை தலைவை பதவி, முதல்வர் பதவி மீது பற்றுள்ள விடாக்கண்டனான் என் அண்ணன் கலைஞர் இதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டார். ஜெயலலிதா உடல் நலமில்லாமல் பேசக்கூட முடியாமல் அப்பல்லோவில் இருந்தபோது, குசும்பர் கலைஞர், “ஜெயா தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும்” என்றார், அப்படிப்பட்ட அறிவாளி என் அண்ணன். யாருக்கும் பிர்ச்சினை என்றால் முதல் ஆளாக நையாண்டி செய்வார் கலைஞர், அப்படிப்பட்ட நையாண்டிக்கே பிரச்சினை என்றால் யாரிடம் போய் முறையிடுவது, என்று நடிகர் திலகம் சிவாஜி போல் நடித்து ‘உச்’ கொட்டினார்.

பகிர்

There are no comments yet