சென்னை: தி.மு.க., தொண்டர்கள் தன்னை வரவேற்று பேனர் வைக்க வேண்டாம் என தனது அறிக்கையில் லேசாக ‘கோடிகள்’ என்பதற்கு ‘கொடிகள்’ என்று டங் சிலிப் ஆகிவிட்டதாக திமுகவில் செயலிழந்த தலைவர் ஸ்டாலின் வருத்தத்துடன் கூறியுள்ளார். தி.மு.க., தொண்டர்கள் சாலையின் இரு புறமும் என்னை வரவேற்று பேனர்கள் வைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏற்கனவே திமுகவின் ‘கலீஜ்’ நடவடிக்கைள், வெளிநடப்பு நாடகங்களை கண்டு மூக்கைப் பொத்தும் பொதுமக்கள் பேனர்களை கண்டு முகம் சுழிக்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதை எச்சரிக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. சாலையின் இரு புறத்திலும், சாலையின் நடுவிலும் பேனர் வைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஒருவேளை திமுக ஆட்சி அமைத்தால் நடுரோடு எதற்கு இருக்கிறது. அப்போது பார்த்துக் கொள்ளலாம். அதுவரை அடக்கி வாசிக்க வேண்டும். என்ன நிகழ்ச்சி நடக்கிறது எங்கு நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்க சில கோடிகள் வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பேனருக்கு பதில், தி.மு.க.,வின் ‘கேடிகள்’ ஓங்கி கோஷமிடுவதை உறுதி செய்ய வேண்டும். முன்பு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவால் உருவான கட்-அவுட் கலாச்சாரதால் கும்பகோணம் மகாமகம் நிகழ்ச்சியில் கொடுத்த உயிர்ப்பலிகள் நினைவுக்கு வரவில்லையா, அந்த கட் அவுட்டுக்கு செலவு செய்த பணம் இருந்தால் கார்டனில் இன்னொரு வீடு வாங்கியிருப்பார் ஜெயலலிதா. ஆகவே திமுக தொண்டர்கள் தங்கள் பங்களிப்பை பணமாக கோடிகளாகவும், அறிவாலயத்தில் உள்ள ஸ்வைப் மிஷினில் தேய்த்து கட்சி நிதி செலுத்தலாம்.

மாணவர் போராட்டத்தின் போது திருவல்லிக்கேணி ஏவல் நிலையத்தை கொளுத்திய அஞ்சா நெஞ்சர்கள் போன்ற கேடிகளும், கேப்மாரி, மொள்ளமாரிகளும், பெருமளவில் திமுகவில் இணைந்து கட்’சீ’ பணி ஆற்ற வேண்டும்.” என்று இனிமே இப்படி சொல்வியா சொல்வியா என ‘சிலிப்’ ஆன தனது நாக்கிற்கு தானே ‘சூடு’ வைத்துக் கொண்டார்.

பகிர்

There are no comments yet