சென்னை: ஜல்லிக்கட்டுக்கான மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில் அந்நிய குளிர்பானங்களை புறக்கணிக்கவும், கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு உள்ளூர் பன்னீர் சோடா, கோலி சோடா போன்றவற்றின் விற்பனையை அதிகரிக்கவும் வியாபாரிகள் முடிவெடுத்து உள்ளனர். அந்த முடிவை எடுக்கும் உரிமை, அவர்களுக்கு உள்ளது,” என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அந்த முடிவை எடுக்கும் உரிமை, அவர்களுக்கு உள்ளது,” என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மத்திய அரசின் நோட்டுத்தடை ஏற்படுத்திய பாதிப்பா, அல்லது ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய சூடு தணியவில்லையா என தொலைக்காட்சிகள் விவாதம் நடத்தி வருகின்றன. முதலில் பிளாக் மார்க்கெட்டில் விற்பார்கள், பின்னர் மெல்ல மெல்ல வழக்கத்திற்கு வந்துவிடும் என பன்னாட்டு நிறுவனகள் நம்பிக்கை தெரிவித்தன. பான் பராக்கை 18 வயதிற்குள்ளானவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்றார்கள், அதை பயன்படுத்துவதே பள்ளி மாணவர்கள்தான். கோக்கில் பூச்சி மருந்து இருக்கிறது என்றார்கள், ‘மேகி’ யில் பிளாஸ்டிக் இருக்கிறது என்றார்கள், அவை மீண்டும் வழக்கத்திற்கு வந்துவிட்டன. ஆனால் தமிழகத்தில் வற்றாத ஜீவ நதியாக ஓடும் டாஸ்மாக் குடிமகன்கள் பெப்சி கோக் கிடைக்காமல் கலங்கிப் போயுள்ளனர்.

இன்று கோயம்படு அலுவலகத்தில் அழுக்கு லுங்கியுடன் ரோட்டை கிராஸ் செய்து பெப்சி கோக் வாங்கப் போன கேப்டன் அவை கிடைக்காமல் கலங்கிப் போயுள்ளதாக மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் முனிசாமி தெரிவித்தார். இது குறித்து சரக்கு போடாமலேயே கண்கள் சிவந்த கேப்டன் நமது கப்சா நிருபரிடம் கூறியதாவது: “என் படங்களில் நான் காலை தூக்கி பைட் செய்யும் போது உடல் வலி தெரியாமல் இருக்க தினமும் ஷூட்டிங் பேக்கப் ஆனதும் ஒயின் ஷாப்பில் ‘புல்’ பாட்டிலை பிக்கப் செய்து கொள்வேன். கண்கள் சிவக்க வசனம் பேசும் காட்சிகளுக்கு ‘கிளிசரின் ஐபி’ போடமாட்டேன், ‘ஆல்கஹால் ஐபி’ தான். அப்போது பழகின பழக்கம் விட முடியவில்லை, மாணவர்கள் போராட்டத்தால் என் அரை உயிரான ‘பீடா’வை தடை செய்து விட்டார்கள், இப்போது என் முழு உயிரான சரக்குடன் கலக்கும் கூல் டிரிங்சை தடை செய்துவிட்டால் நான் எதைக் கலந்து குடிப்பேன்.? சன் டிவியில் பிரபலமான பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் உமா. 15 ஆண்டுகாலமாக இந்த நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கியதால் உமாமகேஸ்வரி என்ற அவர் பெப்சி உமா ஆனார், அவர் பெயரில் இருக்கும் பெப்சியை உங்களால் தடை செய்ய முடியுமா. இதே நிலை நீடித்து நாளை டாஸ்மாக்கையும் மூடி விட்டால் தமிழ்நாட்டை விட்டே செல்லவும் தயங்க மாட்டேன்” என்றார்.

பகிர்

There are no comments yet