சென்னை: கடந்த மூன்றாண்டுகளாக பீட்டா என்ற அமைப்பின் தலையீட்டால் நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள், மாணவர்கள் மற்றும் பொது மக்களின் தொடர் போராட்டத்தால் தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டு இந்த ஆண்டு முதல் தடையின்றி நடைபெற உள்ளது. போராட்டம் தொடங்கியது முதலே ஹிப் ஹாப் ஆதி, லாரன்ஸ், நயன்தாரா, சிம்பு, கமல் உள்ளிட்டோர் அறிக்கை விட்டும், டுவீட் செய்தும் விளம்பரம் தேடி வந்தனர். அதில் முதன்மையானவர் லிவிங்-டு-கெதர் கமல் ஹாசன்.

ஆரம்ப கட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தவர், முதிர் கன்னி திரிஷாவுக்கு எதிர்ப்பு வலுத்ததும் தனது செல்போனில் டவர் சிக்னல் ஒரு பாயிண்ட் மிச்சமிருந்ததால், உடனே போன் செய்து ஆறுதல் கூறி ‘கன்னியும் காளையும் வாழ வழி செய்வோம்’ என்று டுவீட் செய்தார். மாணவர் போராட்டம் முடிந்த கதியில் சட்டமன்றத்தில் அவசர சட்டம் நிறைவேறியதும் அந்தர் பல்டி அடித்து, ‘பீட்டாவும் வாழ வழி செய்வோம்’, சொல்லி வைத்தது போல வேறு பெயரில் வருவார்கள் என்றார், அதே போல் கூப்பா என்ற பினாமி பெயரில் பீட்டா மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த்துள்ளது. தன்னுடன் லிவிங்-டு-கெதர் முறையில் 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்த கௌதமி பிரிந்து சென்ற சோகத்தாலும் லிவிங்-டு-கெதர் முறையின் மீதுள்ள அதீத காதலாலும், முற்போக்கு என்று கூறி பிற்போக்காக பேசும் கமல் இந்து திருமண முறைப்படி ‘தாலி கட்டி’ விவாகம் புரியும் சடங்கின் மீது அதீத வெறுப்பில் இருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசு கிசு உலவி வருகிறது. கமல் பீட்டா தலைமையகத்து எழுதாத அவசர கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கல்யாணம் பண்ணி வாழ்ந்தால் நல்லா இருக்காதுன்னு சொல்ல முடியாது, பண்ணாமல் லிவிங்-டு-கெதர் முறையில் வாழ்ந்தால் நல்லா இருக்கும்னும் சொல்லலாம் இருக்காதுன்னும் சொல்லலாம். நான் ஹாலிவுட் பாணியில் மெத்தட் ஆக்டிங் செய்பவன், என் படத்தில் தாலி செண்டிமெண்ட் அம்மா செண்டிமெண்ட் இருக்காது. லிவிங்-டு-கெதர் முறைப்படி வாழ்வதற்கு இந்த ‘தாலிக்கட்டு’ பெரும் இடைஞ்சலாக இருக்கிறது.

தமிழ் திரைப்படங்களிலும் தாலி செண்டிமெண்ட் கழுத்தறுப்பு காட்சிகள் உள்ளது. அடிக்கடி என் முதல் மனைவி வாணி தாலியை காட்டி மிரட்டியதாலும், சொத்தில் பங்கு கேட்டதாலும், தலாக் கூறி அனுப்பி வைத்தேன். சரிகாவும் சரிவரவில்லை, லிவிங்-டு-கெதர் கௌதமி தான் டாப். எனவே, பிசு பிசுத்துப் போன ஜல்லிக்கட்டு போராட்டத்தை கைவிட்டு, கிளுகிளுப்பான (லிவிங்-டு-கெதர்) வாழும் வகையில் “தாலிக்கட்டு” விவகாரத்தை தடை செய்ய வேண்டும்” என்று கடிதம் எழுதி உள்ளதாக கூறினார்.

பகிர்

There are no comments yet