சென்னை: தலைமைக் கழகத்துக்கு ஜெயலலிதா வந்தால் செய்தி; அறிவாலயத்துக்கு கருணாநிதி வராவிட்டால்தான் செய்தி’ எனச் சொல்வார்கள். கடந்த மூன்று மாதங்களாக அறிவாலயத்தின் பக்கம் தி.மு.க தலைவர் எட்டிப் பார்க்கவில்லை. ‘அறிவாலயத்துக்கு வழக்கம்போல, தலைவர் வர வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். ஆனால், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது என்ன சூழலில் இருந்தாரோ, அதே உடல் பாதிப்புடன்தான் இருக்கிறார்’ என வேதனைப்படுகின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.
ஒரு உடன்பிறப்பு திமுக நிர்வாகி கப்சா நிருபரிடம் கூறும்போது, “தமிழக அரசியலில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் அறிக்கை வராத நாட்களே இல்லை எனும் அளவுக்கு இந்திய அரசியலின் ஒவ்வொரு நகர்வுக்கும் அவரிடம் இருந்து பதில் வரும். அப்படி ஒரு தொண தொணப்புக்கு கியாரண்டி நம்ம தமிழீன தலைவர். தன்னுடைய கருத்துகள் நாள்தோறும் இடம்பெறுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் இந்த விளம்பரப்பிரியர். அவர் “அறிக்கை” வராததால் அரசியலே போரடித்து விட்டது, எல்லாவற்றுக்கும் “கை-அரிப்பு” தான் காரணம். அறிவாலயத்துக்கு எப்போது வருவார் கருணாநிதி?’ என கப்ஸா நிருபர் கேட்க, “”தலைவர் இன்னும் தீவிர ஓய்வில்தான் இருக்கிறார். ட்ரக்கியாஸ்டமி குழாய்கள் இன்னும் அகற்றப்படவில்லை. பிளம்பர்களிடம் பேசி வருகிறோம். சுவாசத்தில் எந்தச் சிக்கலும் இல்லை. தொண்டையில் மாட்டப்பட்ட குழாய்களை எடுக்க, ரீ ஆப்ரேட் செய்ய வேண்டும். அதை முழுமையாக அகற்றினால்தான் அவரால் பேச முடியும். ‘அ ஆ இ ஈ’ என ஸ்பீச் தெரபி கொடுப்பதற்கான முயற்சியில் அவரது வீட்டு லைப்ரரியில் தமிழ் அரிச்சுவடியை தேடி வருகிறோம். அவருக்குத் தேவையானதை தூர்தர்ஷன் ஞாயிறு மதியம் 2 மணி செய்தியில் வருவது போல் சைகை மூலமே கேட்கிறார். தனது பழைய கபட நாட்கள் நினைவுகளை இழந்துவிட்டார். புதிய தமிழ்ச்சிசுவாக விரைவில் உயிர்த்தெழுவார்.” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அப்போது தலைவரை சந்திக்க வந்த செயலற்ற தலைவர் ஸ்டாலின் கப்ஸா நிருபரிடம் சிக்கிக் கொண்டார். அவர் கூறியதாவது “டைப்பய்டில் படுத்தவனை சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறாயா என்பது போல், உடல் நலக் குன்றிய தலைவரை ‘அப்பா…அறிவாலயம் வர்றீங்களாப்பா…? அங்கு வந்துட்டுப் போனால், உங்க உடம்பு நல்ல நிலைக்கு வந்துரும்’ என கலங்கிய கண்களோடு காலாய்க்கிற மாதிரி அழைத்தேன். சைகையில் முறைக்கிறார். நாள்தோறும் கோபாலபுரத்துக்குத் தலைவரை சந்திக்க வருகிறேன். அவருக்குப் புரிகிறதோ இல்லையோ தினம்தோறும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும் தி.மு.க கொடுத்த பதிலடிகளைப் பற்றியும் விரிவாக அவரிடம் பேசுகிறேன். எந்த ரியாக்ஷனும் இல்லை. அப்பாவின் இயல்பான தொண தொணப்பை கொண்டு வருவதற்காக, மிகுந்த சிரமப்படுகிறோம். குடும்ப உறுப்பினர்களும் அவ்வப்போது முதல் மாடியில் உள்ள அப்பாவை அவ்வப்போது போய் செக் செய்கிறார்கள். சில நேரங்களில் முரசொலியைப் வாசித்து காண்பிக்கிறார்கள்!’. இதனால் அக்கம்பக்கத்தினர் ஏதோ தண்டோரா சத்தம் கேட்கிறதே என்று விசாரிக்க வந்துவிட்டனர்’ அரை நூற்றாண்டு காலமாக தமிழர்களை லூஸ் ஆகி காசு பார்த்த கலைஞர் இப்போது, 100 நாட்களுக்கும் மேலாக வயது முதிர்வால் லூஸ் ஆன லுங்கியுடன் கோபாலபுரத்தில் முடங்கிக் கிடப்பதை வேதனையோடு பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற ஸ்டாலின் கண்களின் கண்ணீருக்கு பதிலாக குறும்புத்தனம் தெரிந்தது.
There are no comments yet
Or use one of these social networks