சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி ‘திடீரென’ சந்தித்துப் பேசினார். தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. தமிழக அரசு நீட் தேர்வு தொடர்பான புதிய சட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது தொடர்பாக திராவிட கழக தலைவர் வீரமணி முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கப்ஸா செய்தியாளர்களிடம் பேசிய அவர், “21 ஆண்டுக்கு மேலாக நுழைவு தேர்வு ஏழை அறிவிலி மாணவர்களை பாதிக்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது. பல்வேறு கட்சிகள் தங்கள் முட்டாள் மகன்களை மருத்துவர்களாக்க முடியாமல் எதிர்த்து வந்த இந்த நீட் தேர்வு தொடர்பாக, தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. இதே போல, மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை சட்டத்தின் மூலம் கொண்டு வர முற்படும் சம்ஸ்கிருத மொழி தொடர்பாகவும், இந்த அரசு ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்க வேண்டும். இந்த சட்டம் பொதுபட்டியலில் இடம்பெற்றுள்ளதால், மத்திய அரசு இதனை மறுப்பதற்கு வாய்ப்பில்லை.

மக்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது, அதனை ஆட்டோ, குடிசையை மெரினாவில் கொளுத்தியது போல் கொழுந்துவிட்டெரிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது” என்றும் கூறினார். ஜெயலலிதா இருந்திருந்தால் தலைமை செயலகம் இருக்கிற ரோட்டுக்கு கூட என்னால் வர முடியாது. ஆனால் இன்றைக்கு கதவு திறந்து இருந்ததால் முதல்வரை சந்தித்து வந்துவிட்டது இந்த வீரமணி. ஹிந்து கலாச்சாரத்தை எதிர்த்தே தன் பொழுதை கழிக்கும் என்னை மாதிரி ஆட்களுக்கு அரசியலில் என்றைக்குமே இடம் கிடையாது என்பது எனக்குத் தெரியும். அதனால் இளமை காலத்தே என்னால் சுருட்டப்பட்ட கருப்பு துண்டு உள்ளிட்ட பெரியாரின் சொத்துக்களை நான் பாதுகாப்பது போல், அம்மாவின் கார்டன், கொடநாடு உள்ளிட்ட சொத்துக்களை சின்னம்மாவுக்கு தாரை வார்க்க ஆலோசனை செய்துவிட்டு, திமுகவின் ‘அண்டிப் பிழைக்கும்’ அரசியல் தந்திரத்தை சொல்லிவிட்டு, அதிமுகவின் ‘கூழைக்கும்பிடு’ டெக்னிக்கை கற்றுக் கொண்டு வந்தேன்” என்று தெறிக்கவிட்டார்

பகிர்

There are no comments yet