சென்னை: ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுபாக்கூர் அறிக்கையில், ” பாஜகவின் சதியால் நடக்காமல் இருந்த ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டாட்த்தால், தமிழகமெங்கும் பல இடங்களில் மகிழ்ச்சியோடு கொண்டாடும் வேளையில் ஆங்காங்கே நடக்கும் சில விபத்துகளும், உயிரிழப்புகளும் ‘லைட்’டாக மகிழ்ச்சி அளிக்கிறது.

எனவே ஜல்லிக்கட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கும், அவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் முதல் உதவியும், இரத்த வங்கியுடன் நடமாடும் மருத்துமனைகளும், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் பணியில் இன்றி வீரர்கள் இறப்பது உறுதி செய்ய வேண்டும். 20 வீரர்கள் ஒரு மாட்டைப் பிடிக்கும்போது, அதில் 2 பேருக்காவது கொம்பு கிழித்து குடல் சரிவதை உறுதி செய்ய வேண்டும். சரிந்த குடலை அள்ளிச்செல்ல கேரி பேக்குகள் தடையின்றி கிடைக்க வழி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு ஏதோ பெயரளவில் சிகிச்சை அளிக்க முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவர்களுக்கு இலவச சிகிச்சைகள் என்ற பெயரில் உயிர் எடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட வேண்டும்.

ஏன் இந்த கவலை என்றல் சமீபத்தில் பாதுகாப்பில் இருந்த ஒரு காவலர் மாடு முட்டி அளவுக்கு அதிகமான இரத்த போக்கால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று செய்தி என்னை மிகவும் புளகாங்கிதம் அடையச் செய்தது, ஆட்டோ குடிசைகளை கொளுத்திய பாவம் சும்மா விடாது. நாட்டுக் காளைகள் இனம் ஆர்.எஸ்.எஸ். பாஜக போல அழியாமல் இருப்பதற்கு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் உரிய ஆராய்ச்சிகள் செய்து விஞ்ஞான பூர்வமாக இனத்தை வளர்க்க வெளிநாட்டு பசுக்களின் திசுக்களை திணிக்கும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஊக்கமருந்து அளிப்பது போல் வளர்ப்போருக்கு டாஸ்மாக்கில் தாரைவார்க்க உற்சாக பான ‘ஊக்கத் தொகை’ அளிக்க வேண்டும். மேலும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் சாணி அள்ளும் திறமையை உறுதி செய்ய முடியும், புயல் வெள்ள நேரங்களின்போது துப்புரவு வேலைகளுக்கு அமர்த்திக் கொள்ளலாம். ஜல்லிக்கட்டு விளையாட்டை மற்ற விளையாட்டுக்கள் போல ஊக்குவிக்கும் விதமாக ஒலிம்பிக்கில் சேர்த்து, அரை டிரவுசரை யூனிபார்ம் ஆக்கி, ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் பாஜக பசுமாடுகளுக்கு பால் கறக்கும் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் பல இளைஞர்கள் ஜல்லிக்கட்டு விளையாடுவதற்கும் பால் வளம் பெருகுவதற்கும் ஆர்வம் காட்டுவர்.” இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.

பகிர்

There are no comments yet