சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி, சில மாதங்களுக்கு முன், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க, தொண்டையில் துளையிட்டு, ‘டிராக்கியோஸ்டமி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்; மருத்துவ சிகிச்சை தொடர்கிறது. மூன்று டாக்டர்கள், செவிலியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: வயோதிகம் காரணமாக, ஞாபக மறதி, கருணாநிதிக்கு அதிகம் உள்ளது. பேச்சும் குறைந்துள்ளது. மூன்றுநாட்களுக்கு முன், அவரை மாடியிலிருந்து கீழ் தளத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, அங்கு இருந்த குடும்ப உறுப்பினர்களை பார்த்து, குணா கமல் மாதிரி கருணாநிதி சிரித்துள்ளார். ஆனால், பேச முடியவில்லை. பழைய நினைவுகள் குறித்தும், சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றியும், கருணாநிதியிடம் பேசினால், அவர் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என, டாக்டர்கள் கருதுகின்றனர். எனவே சர்காரியாவில் இருந்து 2-ஜி வரை அனைத்து சம்பவங்களையும் அவருக்கு நினைவுபடுத்த இரண்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்னிலையில் கருணாநிதியின் நிலைமையை பார்த்து ஸ்டாலின் வருத்தத்தில் இருக்கிறாராம். இவரால் சட்ட்டசபைக்கும் வரமுடியாது, வந்தாலும் அங்கே கூக்குரலிட்டு வெளிநடப்பு செய்ய முடியாது, எனவே இவர் பேசாமல் திருவாரூர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தால் அங்கு உதயநிதியை அல்லது சபரீசனை நிக்க வைக்கலாம் என்று நினைக்கிறார். அது மட்டுமல்லாமல் இப்போது அதிமுகவில் இருக்கும் குழப்பத்தை பயன்படுத்தி இடைத்தேர்தலில் சுலபமாக ஜெயித்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளார் என்று அந்த அறிவாலய வட்டாரம் தெரிவித்தது.

There are no comments yet