சென்னை: ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு சசிகலாவை தலைமை ஏற்க வருமாறு அ.தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதையடுத்து டிசம்பர் 28ம் தேதி பொதுக்குழுவில் சசிகலா, பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்து அவர் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார். அடுத்து சசிகலாவை முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் தலைமையை ஏற்காத அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து வருகின்றனர். ஜெயலலிதா உயிரோடு இருந்தக் காலக்கட்டத்தில் போயஸ் கார்டன் இல்லம் முன்பும், அப்போலோ மருத்துவமனை முன்பும் காத்திருந்த தீபாவை கண்டுக் கொள்ளாத அ.தி.மு.க.வினர் இப்போது ஆதரவு தெரிவிப்பதாக சொல்வதுதான் அரசியல்!

ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபோது கூட்டத்தோடு கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார் தீபா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தீபாவிற்கு கொடிப்பிடிக்கத் தொடங்கி உள்ளனர் அதிருப்தி அ.தி.மு.க.வினர். தீபா, அரசியலுக்கு வருவதாக இன்று அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அரசியல் தொடர்பான அடுத்தக்கட்ட அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குட்டி அம்மா தீபா, சின்னம்மா சசிகலாவின் பி-டீம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஒரு அரசியல் விமர்சகர் கூறும்போது: அத்தையின் இறப்பில் எந்த மர்மமும் இல்லை. அது இயற்க்கை மரணமே’ என தீபா திருவாய்மொழியும்போதே அனைவரும் விழித்துக்கொள்ளவேண்டுமல்லவா? ‘அத்தையை கொன்றுவிட்டார்கள்’ என உதார்விடுவதன் மூலமே தன்னால் சசிகலாவுக்கு எதிராக காலூன்றமுடியும் என்பதை அறிந்தும் தீபா அடக்கிவாசித்ததன் மர்மமென்ன? 1987 ல் ஜானகி ரமச்சந்திரனை தூண்டிவிட்ட ஆட்களில் ஒருவரான சைதை துரைசாமி பலரையும் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறார். தீபாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மெண்ட் என்ன என்று இன்னும் யாருக்கும் புரியவில்லை.

அ. தி. மு. க போன்ற கட்சிகளில் தலைமை மாறும்போது சலசலப்புகள் உருவாவது வழக்கமான ஒன்றே. அதை எப்படி கையாள்வது என்பதே அந்த தலைமைக்கு இருக்கும் சவால். ஜெயலலிதா இறந்தபின் அவரைமட்டுமே தலைவராக ஏற்ற பலர் வேறுபக்கம் நோக்கி பயணிக்க முயல்வர். அவர்கள் தி. மு. க பக்கம் செல்லாமல் ஒரு டம்மி அ.தி.மு.க தலைமை பக்கம் திருப்புவதே இதன் நோக்கம். அப்படி டம்மி அ.தி.மு.க தலைமையான தீபாவின் பின் வந்தவர்களை மெதுவாக சசிகலா பக்கம் திருப்புவதே இவரது பணி. சசிகலாவுக்கு இவ்வளவு அறிவா என்று வியக்க வேண்டாம். சசிகலா என்பது ஒரு பொம்மையே, அவருக்கு பின்னால் இருந்து இயங்கும் எம். நடராசனின் வரலாற்றை பார்த்தால் நமக்கு புரியும் சசிகலா முட்டாள் அல்ல என. விடுதலை புலிகள், ராஜீவ் கொலை , ஈழப்போர் என எல்லா விடயங்களிலும் மக்களை திமுகவிற்கு எதிராக திருப்பிவிட்டு, வெற்றிகளை பறித்த சாணக்கியர்.

தீபா வசிக்கும் வீடுகூட சசிகலாவின் குழுமத்தில் உள்ள ஒருவரின் வீடு என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக அதிருப்தியாளர்களை ஒண்றுதிரட்டி சிந்தாமல் சிதறாமல் சசிகலாவின் கரங்களில் ஒப்படைக்கப்போகும் பணியை தீபா திறம்பட செய்கிரார். அவரது பணியில் ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. எந்த அ. தி. மு. க இரண்டாம்கட் தலைவர்களும் மாற்றுக்கட்சியைநோக்கி இதுவரை பயணிக்கவில்லை. என்று முடித்தார்.

இன்னொரு தீபாவுக்கு மிக நெருங்கிய வட்டாரம் தெரிவித்ததாவது: பயிற்சி இல்லாத முயற்சியாக முடிவுரை எழுதிடாமல் அத்தைக்கு மதிப்பளிப்பதாக இருந்தாலும் அதிமுகவுக்குள் பிளவு என்பதுதிராவிட இயக்க பரிணாமத்தை சிதைக்கும் டில்லி சூழ்ச்சிக்கு இடமளிப்பதாகவே கருதப்படும். மிகச்சிறந்த அரசியல்வாதி சிந்தனையாளர் பெரியாரின் தம்பியின் மகன் பேரறிஞர்அண்ணாவின் அன்பைப் பெற்றவர் ஈவெகி.சம்பத் சொல்லின் செல்வர் அவரே திராவிட வழித்தோன்றல், தமிழ் தேசியம் பேசி கடைசியில் கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று கரைந்து போனார் .நாவலர் இரா.நெடுஞ்செழியன் மற்றும் நால்வர் அணி கண்டு ஆர்எம்வீரப்பனோடு தனிமனித ஒற்றை சொல்லில் முடங்கி விட்ட லெட்டர் பேடு கட்சிகளின் வரிசையில் உள்ளதை ஊன்றி பார்த்தால் ஊடக வலைதளம் போன்ற வசதிகளற்ற காலத்தில் காலாவதியாகின. மெரினா புரட்சியை நடத்தியவர்களும் தனியாக அரசியல் களம் கட்டமைப்பது எளிதல்ல என்பதைப் புரிந்து கொண்டனர். தமிழருவி மணியன் வாய்சொல்லிலேயே வடை சுட்டு பிரபலாக முடிந்ததே தவிர அரசியல் அரங்கத்தில் வட்டாட இயலாமல் தரகு பணிக்குரியவர் போலாகி விட்டார். அருமையான திறமைசாலி அனுபவம் தொண்டர்கள் என்ற அமைப்பு கிடைத்தும் சோபிக்க முடியாதவர்களின் பட்டியலில் வைகோ இடம் பிடித்ததும் அதிமுக கூட்டால் பலமான முகமாகத் தெரிந்த விஜயகாந்த் தொடர்ந்து கட்சி நடத்த முடியாத நிலைமைக்குள்ளானதும் இன்றைய அரசியல் களத்தில் அதிமுகவை சரிவுக்குள்ளாக்க நினைப்போருக்கு இடம் வழங்காமல் அத்தையின் போயஸ் தோட்டத்திற்குள் சென்று முறையாக பயில்வதே தீபாவுக்கும் திராவிட இயக்க நலனுக்கும் உரியது என்று தீபாவுக்கு அவரது அட்வைசர் சொன்னதை அடுத்து போயஸ் தோட்டத்தில் சின்ன அத்தை சின்னம்மாவை ரகசியமாக சந்தித்திருக்கிறார் தீபா. இதையடுத்து இருவரும் இணைந்து செயல்பட்டு திமுகவை தலையெடுக்க விடாமல் செய்ய ஆரம்ப காலத்தில், ஜெயலலிதா வகித்துவந்த கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை தீபாவுக்குக் கொடுத்து, அம்மா புகழ்பாடும் விதமாக பயணம் அனுப்பிவைக்கவே எம். நடராசன் திட்டம் வகுத்துள்ளதாவும், தீபாவுக்கு கூடவே, எம்.பி பதவியும் தரப்படும் என்றும் செய்திகள் நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet