சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சுமார் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரை நேரில் சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஜெ., தோழியான சசிகலா மட்டும் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மட்டும் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தது. ஆனால், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் தீவிரமாகியுள்ளது. தற்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தினால் அனைத்து விவரங்களையும் அளிக்க தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை குழு தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஏற்கனவே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைத்து விளக்கங்களும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டு விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரெட்டி காருவை தனியாக மடக்கிய நமது கப்ஸா நிருபரிடம் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியதாவது: ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக எந்த விவரத்தையும் விசாரணையின் போது வழங்க தயாராக உள்ளோம். விசாரணையை பொறுத்தவரை எங்களது நிலை திறந்த புத்தகமாகவே உள்ளது. அனால் அந்த புத்தகத்தில் எல்லாமே எதுவுமே எழுதப்படாத வெற்று பக்ககங்கள் தான். சின்னம்மா அனுமதித்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளோம். உடல்நிலை தேறிவந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்ட அந்த ஒரு நிமிடம் மட்டுமே பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அவரது உடல்நிலையில், எந்த பிரச்சினையும் இல்லை. அவர் தெளிவாக இருந்தார். அனால் அவர்க்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தான் தெளிவாக இல்லாமல் குழம்பி அவருக்கு மரணத்தை கொடுத்து விட்டனர். ஜெயலலிதாவின் கால்கள் எடுக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை, அவரின் உயிர் மட்டுமே எடுக்கப்பட்டது என்று கூறினார்.

There are no comments yet