யாருமே இல்லாத மெரினாவில் பிக் பாக்கெட் அடித்த குற்றத்திற்காக் வடமாநில வாலிபரை என்கவுண்டர் நரபலி – ஜல்லிக்கட்டு கலவர திருஷ்டிக்காக என ஓபிஎஸ் பேட்டி

461

சென்னை: மெரினாவில் வடமாநில இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 144 தடை ஆணை அமலில் உள்ள நிலையில் கொலை நடந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினாவில் தலைமை இன்றி பொதுமக்களே ஒன்றிணைந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கொச்சைப்படுட்த்தும் விதமாக இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர் ஆட்டோ பைக் உள்ளிட்ட பொது சொத்துக்களை தீ வைத்து எரித்தனர்.

இதனால் பெரும் வன்முறை ஏற்பட்டது. மெரினாவில் மீண்டும் கூடி மாணவர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக போலிசாருக்கு சமூக ஊடகங்களின் மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாணவர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் மெரினாவில் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு வரும் 12ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடமாநில இளைஞர் ஒருவர் மெரினா பீச்சில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலை செய்யப்பட்ட இளைஞர் யார்? எதற்காக கொல்லப்பட்டார் என விசாரித்து வருகின்றனர். மெரினாவில் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நமது கப்சா நிருபரை அழைத்த ஓ.பன்னீர்செல்வம் கீழ்க்கண்டவாறு பேட்டி அளித்தார்: இந்த கொலை மெக விசேஷமானது. இது தான் தமிழ்நாட்டு போலீஸ்  கெட்டிக்காரத்தனம். எப்படி யாரை எங்கே போடணுமா போட்டுருவாங்க. முன்பு அம்மா ஆட்சியில் ஜோசியர் கூறியபடி 2001ல் கற்புக்கரசி கண்ணகி உக்கிரம் தாங்காததால் ஜெயலலிதாவால் கண்ணகி சிலை அகற்றப்பட்டது. அண்ணா சாலையிலுள்ள ‘அன்பகம்’முன்னால் மற்றொரு கண்ணகியின் சிலை தோன்றியது. 2006-ல் மறுபடியும் கண்ணகி மெரினா கடற்கரைக்கு வந்து சேர்ந்தாள். மெரினா கடற்கரையில் தலைவர்களின் பேருரைகளைப் பொதுமக்கள் கேட்கும் வண்ணம் சீரணி அரங்கம் அமைக்கப்பட்டு, கட்சிகளுக்கும் கலை மற்றும் மதம் சார்பான விழாக்களுக்கும் வாடகைக்குத் தரப்பட்டது.

பொதுப்பணித் துறையினரால் திடீரென்று தரைமட்டமாகிய சீரணி அரங்கம், அதிகார ஆணவத்தால் ஜீரணிக்கப்பட்டது. கடற்கரைக் காற்றை அனுபவித்துக்கொண்டே சீரிய கருத்துரைகளை மக்கள் கேட்கும் ஒரே வாய்ப்பும் பறிக்கப்பட்டது. நடை உடை மேக்கப் கொண்டை என அனைத்திலும் ஜெயலலிதாவை பின் பற்றும் சின்னம்மா ஜோசியத்திலும் பின்பற்றுகிறார். அலைகடலென திரண்ட மக்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் அரசியல் எதிர்காலத்து ஒரு திருஷ்டியாக போய்விட்டதாலும், அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாலும் ஜோசியரின் ஆலோசனைப்படி, சின்னம்மாவின் சின்னபுத்தி ஆணைப்படி பிழைப்புத்தேடி சென்னை வந்த வட மாநில வாலிபரை நரபலி கொடுத்து காவு வாங்கினோம். யாருமே இல்லாத மெரினாவில் பிக் பாக்கெட் அடித்த குற்றத்திற்காக் எங்கவுண்டர் செய்ததாக பைலை மூட காவல் துறைக்கு அறிவுறுத்தி உள்ளோம்” என்று பல் இடைவெளி தெரிய நமுட்டுச்சிரிப்பு சிரித்தார்.

பகிர்

There are no comments yet