சென்னை: உடல் நலக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா மறைந்தாலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அது குறித்து விசாரித்து உண்மையைத் தெளிவுபடுத்துமாறு பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார் நடிகை கவுதமி. ஆனால் அந்தக் கடிதத்துக்கு பிரதமர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இல்லை. இந்த நிலையில் தனது கடிதத்துக்கு இத்தனை நாட்களாகியும் பிரதமர் அலுவலகம் பதில் தராதது ஏன் என்று கவுதமி கேள்வி எழுப்பியுள்ளார். 13 வருட லிவிங்-டு-கெதரில் கமல் என்னை ஏமாற்றி திரிஷாவுக்கு கொக்கி போடுவது போல் மோடியும் என்னை ஏமாற்றிவிட்டார் என்றார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுபாக்கூர் அறிக்கையில், “முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகம் நிலவுவதைக் குறிப்பிட்டு ஸ்டாம்ப் ஒட்டாமல், கடந்த டிசம்பர் 8-ம் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். இது சமூக வலைத் தளங்களிலும் மீடியாவிலும் பலராலும் பகிரப்பட்டு புற்று நோயால் ‘மார்–கெட்டுப்’ போன எனக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. எனது மகளுக்கும் தனுஷுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சமூக வலைத் தளங்கள், மீடியாவைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதில் பிரதமர் மோடி மற்ற தலைவர்களை விட முன்னோடியாகத் திகழும் டிஜிட்டல் டீ மாஸ்டர். அப்படிப்பட்டவருக்கு நான் எழுதிய கடிதம் மீடியா வழியாக தெரிந்த பிறகும் கூட, அதற்கான பதிலை பிரதமரோ, அவரது அலுவலகமோ இது வரை தெரிவிக்கவில்லை.
நான் கமலுக்கு எழுதிய காதல் கடிதங்களுக்கு உடனே கமலிடமிருந்து பதில் வந்துவிடும். லேடி விஷயத்தில் மோடி கொஞ்சம் வீக் தான். இந்த நாட்டின் பிரஜை என்ற முறையில் ஜனநாயக முறைப்படி நான் ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்ட வலி மற்றும் சந்தேகத்தை பிரதமருக்குத் தெரிவித்திருந்தேன். பல லட்சம் மக்களுக்குத் தெரிந்த அந்தக் கடிதம், பிரதமரின் பார்வைக்கே போகவில்லை என்பது, சினிமாவில் டூ பீசில் பெண்களை ஆடவைத்து அவமதிப்பது போல் குடிமக்களாகிய நம்மைச் சூறையாடுவதற்குச் சமம். பிரதமர் மோடியை நான் கமலுக்கு இணையாக பெரிதும் மதித்தேன். ஆனால் ஆஸ்கார் நாயகனை விட மிகப்பெரிய நடிகராக மோடி இருக்கிறார். அனைத்து டாஸ்மாக் குடிமகன்களும் பிரதமர் முன் சமம் என்றால், எனது கேள்வியை நான் சரக்கடிப்பதில்லை என்பதால் பிரதமர் புறக்கணிக்கிறாரோ? ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பலரும் அவரது உடல்நலம் விசாரிக்க நேரில் போய்ப் பார்த்தனர். மோடி வரவில்லை. ஒருவர் கூட அவரது உடல் நிலை பற்றிய உண்மையைத் தெரிவிக்கவில்லை. சின்னம்மா கூட வாய் திறக்கவில்லை.
ஜெயலலிதா மறைவு, வரதா புயல், சபாஷ் நாயுடு படப்பிடிப்பு நிறுத்தம், விஸ்வரூபம் ரிலீஸ் தள்ளிவைப்பு, கமலுடன் எனது லிவிங்-டு-கெதர் பிரேக் அப் போன்றவற்றால் தமிழக மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். தமிழக மக்கள் தங்கள் கலாச்சார அடையாளத்தை மீட்டெடுக்க பெரும் போராட்டத்தை நடத்தி தீவட்டி தடியன்களான போலீசார் தீ வைத்து முடித்து வைக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அரசு தங்கள் அழுகைக்கு செவி சாய்க்கவில்லை என்ற வேதனையில் பல விவசாயிகளும் கமல் பட ரிலீஸ் தாமதம், பைரவா படம் ரிலீசாவது போன்றவற்றால் ரசிகர்கள் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இத்தகைய துயரங்களுக்குப் பிறகாவது மத்திய அரசிடமிருந்து தமிழக மக்களுக்கு ஆறுதலான செய்தி ஏதாவது வரும் என்று எதிர்ப்பார்த்தோம். ஒருவரது கேள்விக்கு பதில் கிடைக்க தாமதமானால் பரவாயில்லை. ஆனால் பதிலே கிடைக்கவில்லை என்றால், அந்த குடிமகனுக்கு, என்னைப்போன்றா ‘நடி’மக்களுக்கும் நாட்டில் பாதுகாப்பில்லை என்றுதானே அர்த்தம். அதுவும் ஆட்சிப் பொறுப்பிலிருந்த ஒரு முதல்வர் 24 மணி நேர சிசிடிவி ரெக்கார்டிங்கில் ‘மர்மமான’ முறையில் இறந்திருக்கிறார். அவர் மரணம் குறித்த தகவல்களை ‘ஐயிட்டம் கேர்ள்’ ஒளிவு மறைவின்றி ஆடுவது போல், எந்த திரைமறைவும் இன்றி வெளியிட வேண்டுமல்லவா? இதைத் தெரிந்து கொள்ளவும் நாம் தெருவில் இறங்கிப் போராட வேண்டுமோ?” என்று ஆவேசமாகக் கேட்டுள்ளார்.
நமது கப்ஸா நிருபர் விசாரித்ததில், உண்மையில் கடிதம் அனுப்பபட்டதா என்று தெரிந்துக்கொள்ள 12.12.2016 ஆம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தங்கள் அலுவலகத்திற்கு நடிகை கௌதமி அவர்கள் அனுப்பிய கடித நகல் கோரி ஒருவரால் மனு செய்யப்பட்டது. இதற்கு 27.1.2017 தேதியிட்ட கடிதம் மூலம் NO INFORMATION AVAILABLE ON RECORDS என்று பதிலளித்துள்ளனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள். இதன் மூலம் கௌதமி கூறியது பொய் என்று தெரிகிறது. கமலுடன் 13 ஆண்டுகள் ‘தொடர்பில்’ இருந்ததை ஆரம்பத்தில் சொல்லாத கவுதமி, ப்ரேக் அப்பின் போது, ஞாயப்படுத்த பகிரங்கமாக அறிவித்து பத்தினி வேடம் போட்டது போல, கடிதம் எழுதவில்லை என்ற குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று முந்திக்கொண்டு ‘பதில் வரவில்லை’ என்று மோடி மீது குற்றம் சாட்டுகிறார் என்று தெரிவித்தார்.
There are no comments yet
Or use one of these social networks