சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சசிகலாவின் கணவர் ம.நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிமுக பொது செயலாளரும் சட்டமன்ற குழு தலைவருமான சசிகலாவின் கணவர் ம.நடராஜன். இவருக்கு, நேற்று மாலை உடல் சோர்வு மற்றும் அசதி காரணமாக திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆரம்பகட்ட சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் நடராஜன் அப்போலோ மருத்துவமனையில் உள்ள எல் பிளாக்கில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஓரிரு நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து அப்பல்லோ வட்டாரங்கள் நமது கப்ஸா நிருபரிடம் கூறியபோது: தனது மனைவிக்கு முதல்வர் பதவி என்ற அதிர்ச்சியான செய்தியை கேட்டு நடராசனுக்கு ரத்தக் கொதிப்பு ஏற்பட்டுள்ளது. சின்னம்மா சசிகலா முதலவர் பதவி ஏற்றவுடன் இது சரியாகி விடும் என்று தெரிவித்தனர்.

There are no comments yet