சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஒரு மனதாக சசிகலா தேர்வு செய்யப் பட்டார். அதற்கு முன்னதாக, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜி னாமா செய்தார். இந்த ராஜினாமா வும் ஆளுநரால் ஏற்கப்பட்டது. தற்போது அடுத்த அமைச்சரவை பதவியேற்கும் வரையில், தமிழக முதல்வராக பன்னீர்செல்வமே தொடர்கிறார்.

சட்டப்படி, தமிழக ஆளுநரிடம், சசிகலா தனக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்கும் வகையில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை அளிக்க வேண்டும். தொடர்ந்து, ஆட்சி அமைக்க சசிகலா உரிமை கோர வேண்டும். அதை ஏற்று, ஆளுநர் பதவி யேற்பு தேதியை உறுதி செய்து ஆட்சிப் பொறுப்பேற்க அழைப்பார். தொடர்ந்து, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

நேற்று காலை முதலே, தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், பதவியேற்பு விழாவுக் கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டனர். இதையடுத்து, விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதேபோல், தமிழக அரசின் பொதுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் தலைமைச் செயலகத்திலேயே இருக் கும்படி பணிக்கப்பட்டனர். தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்படாமல் பதவி யேற்புக்கான அழைப்பிதழ் தயாரிக் கப்பட்டுள்ளதாகவும், ஆளுநர் வருகை யைத் தொடர்ந்து அடுத்தகட்ட நட வடிக்கை தொடரும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், தமிழக ஆளுநர் நேற்று இரவு வரை சென்னை வர வில்லை. நேற்று முன்தினம் கோவை யிலிருந்து டெல்லி சென்ற அவரது சென்னை வருகையை எதிர்பார்த்து அதிமுக காத்திருக்கிறது. ஆளுநர் நிகழ்ச் சிப்படி, அவர் இன்று (பிப்.7-ம் தேதி) கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வேண்டும். அதற்காக அவர் நேற்று இரவு சென்னை அல்லது கோவைக்கு வரவேண்டும்.

எனவே, சென்னை அல்லது கோவையில் எங்கு வேண்டுமானாலும் ஆளுநரை சந்திக்க சசிகலாவும், மூத்த அமைச்சர்களும் தயாராக இருந்தனர். ஆனால், இரவு 9 மணி வரை ஆளுநர் வருகை தொடர்பான எந்த தகவலும் வரவில்லை.

இதற்கிடையில், பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக் கான அழைப்பிதழ் நேற்று இரவு வழங்கப்பட்டது. அதில் ஆளுநர் பெயர் இடம் பெறவில்லை. இதனால், ஆளுநர் வித்யாசாகர் ராவ் கோவை செல்லவில்லை என்பது தெளிவாகி விட்டது. அதே நேரம் இரவு 9 மணி வரை ஆளுநரின் சென்னை பயணமும் இறுதி செய்யப்படவில்லை. இதனிடையே டெல்லியில் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், நேராக மும்பை சென்றுவிட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின் றன. இதனால் இன்று நடைபெறுவதாக கூறப்பட்ட சசிகலா முதல்வராக பதவி யேற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட தாக தெரிகிறது.

இது குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: சின்னம்மாவை பார்த்து மிரண்டு போயிருக்கிறார் கவர்னர். உடனடியாக பதவியேற்பு செய்து வைக்கும் எண்ணத்திலும் கவர்னர் இல்லை, சசிகலா பதவியேற்பு தொடர்பாக அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எனவே மீண்டும் ஓபிஎஸ் முதல்வராக பாதை ஏற்க வாய்ப்புள்ளது என்றனர்.

There are no comments yet