சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வர உள்ளதால் சின்னம்மா, முதல்வராகக்கூடாது என்று சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச் செயலாளர் செந்தில்ஆறுமுகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். அடுத்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்கள் ‘திடீர்’ கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்டு முதல்வராக சின்னம்மா தேர்வு செய்யப்பட்டார்.

முதல்வராக சசிகலாவை அறிவித்தவுடன் நிலுவையில் இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்துக்குள் அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சின்னம்மா, பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சின்னம்மா நேரடியாக இந்திய ஜனாதிபதி ஆக வேண்டும், என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உண்ணும்விரத போராட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. அடுத்து சொத்துக் குவிப்பு வழக்கினை தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும் என்றும், தற்போது தமிழக டுவிட்டரில் முதல்வராக உள்ள சின்னம்மா ஜனாதிபதி ஆக்கப்பட வேண்டும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு உதாரணமாக பிரதமர் மோடியை பற்றி பழைய பஞ்சாங்கங்களை கிண்டி குறிப்பு தரப்பட்டுள்ளது. அதில் அப்பல்லோவில் ஜெயா உடல்நலம் குன்றியபோது சின்னம்மா சிஎம் கனவை நிறைவற்றிக் கொண்டது போல், கேஷுபாய் பட்டேல் உடல்நலம் குன்றியபோது மோடி முதல்வரான தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா கலவரம் போல் ஒரு படி மேலே குஜராத் கலவரத்தை நடத்திக் காட்டிய சீரிய அரசியல் பங்களிப்பு பட்டியலிடப்பட்டதுடன், எம்.எல்.ஏ கூட ஆகாத மோடி பிரதமர் ஆனது போல், ‘அம்மாவுக்கு சிகை அலங்காரம், சிக்கெடுத்துவிட்ட சின்னம்மாவும் இந்த நாட்டின் ஜனாதிபதி ஆவது ஆச்சரியப்படும்படியான விஷயம் ஒன்றுமில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்

There are no comments yet