சென்னை: பொதுச்செயலாளராக சின்னம்மா தேர்வானதே செல்லாது, அப்புறம் எப்படி அவர் முதல்வராக முடியும் என்று கேள்வி எழுப்பி, சட்டப் போராட்டத்திற்கு தயராகி வருகிறார் அ.தி.மு,க முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகருமான பி.ஹெச்.பாண்டியன். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நாள்தோறும் அப்போலோவிற்கு விசிட் செய்து வந்தவர் பி.ஹெச். பாண்டியன். ஜெயலலிதா மரணம் அடைந்து, இறுதிச்சடங்கு நடைபெற்றபோது பி.ஹெச். பாண்டியன் அங்கு இருந்தார். ஆனால், அதன் பிறகு தொடர்ந்து அமைதிகாத்து வந்தார். குறிப்பாக, அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யபட்டதும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், முக்கியப் பிரமுகர்களும் சசிகலாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போதிலும் இவர் அமைதியாகவே இருந்து வந்தார். “2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் போயஸ்கார்டனில் ஜெயலலிதா என்னிடம் அவரைக் கொல்ல ஒரு கும்பல் பெங்களூருவில் சதி செய்கிறது. அவர்களை நான் கட்சியை விட்டே நீக்கப் போகிறேன்” என்றார். அதன் பிறகுதான் சசிகலா உட்பட அவருடைய குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள். அதன் பிறகு சில மாதங்களில் மீண்டும் சசிகலா கார்டனுக்குள் வந்தார். அதன் பிறகு என்னிடமும், மறைந்த பத்திரிகையாளர் சோ-விடமும் ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தபோது ‘எனக்குப் பயமாக இருக்கிறது. எனக்கு பாய்சன் வைத்துக் கொன்று விடுவார்களோ என்ற பயம் உள்ளது’ என்று தெரிவித்தார்” என்றார் அதிரடியாக.

இது குறித்து அப்பல்லோ நிர்வாகம் வெளியிடாத அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘என் அம்மாவின் மறைவுக்குப் பின், எனக்கு அம்மாவாக இருப்பவர் சசிகலாதான்’ என்று புரட்சித்தலைவி அம்மாவே சொல்லியிருக்கிறார். ‘விஷம் கொடுத்தார்’ என்று கூறுவது மட்டும் உண்மை. ஜெயா இறந்தே பிறகே விஷம் கொடுத்தோம். அதாவது மருத்துவமனையில் உடலை பதப்படுத்துவதற்கான பார்மலின் திரவத்தைக் கலந்து தயாரித்தோம். அதன் பின்னர் திரவம் செலுத்தப்பட்டது. உடல் நிறத்தை அவ்வாறே தக்க வைக்கும் வகையில், திரவத்தின் கலவை அளவு மாற்றப்பட்டது. ஜெயலலிதாவுக்கு (இல்லாத) வலது காலில் சிறிய குழாய் செருகி அதன் வழியாக திரவத்தைச் செலுத்தினோம். சுமார் 15 நிமிஷங்களில் திரவத்தைச் செலுத்தும் பணி நிறைவடைந்தது. இதைத்தான் விஷம் கொடுத்து விட்டோம் என்று தவறாக பரப்புகிறார்கள். அப்படிப் பார்த்தால் அதிக அளவில் எதுத்டுக் கொண்டால் தூக்க மருந்து கூட விஷம் தான். எத்தனை திரைப்படங்களில் பார்த்திருப்போம்.. தலைவர்களின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும் போது, தட்ப வெட்ப சூழல் காரணமாக உடல் கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். முக்கிய நபர்கள் இறந்து, அவர்களது உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கும்போது உடல் கெட்டுப் போகாமல் இருக்கவும், அஞ்சலி செலுத்த வருவோருக்கு துர்நாற்றம் எதுவும் வீசாமல் இருப்பதற்கும் உடலைப் பதப்படுத்துவது வழக்கம். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உடலும் இதே வகையில்தான் பதப்படுத்தப்பட்டது. என்று கூறப்பட்டுள்ளது.

பகிர்

There are no comments yet