சென்னை: ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியல் களத்தையேப் புரட்டிப் போட்டுவிட்டது.கடந்த டிசம்பர் 5 – ம் தேதியில் இருந்து தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன.அனைத்து மாநில அரசியல் நகர்வுகளையும் மக்கள் மறந்துவிட்டு தமிழகத்தையே உற்று நோக்குகிறார்கள் இந்திய மக்கள். அந்த அளவுக்கு அதிரடி மாற்றங்கள், அனல் பறக்கும் அரசியல் பேட்டிகள் என தமிழக அரசியல் களம் அதகளப்படுகிறது. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டவுடன் விரைவில் முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளதாக அப்போதே தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் கடந்த (5.2.2017)ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில், சசிகலா நடராசன் சட்டமன்றக்குழுத் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் சசிகலா முதல்வராகப் பதவி ஏற்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இந்த நிலையில்,கடந்த செவ்வாய்க்கிழமை (7.2.2017) முதல்வராக சசிகலா பதவி ஏற்பதற்கான விரிவான ஏற்பாடுகளும் நடைபெற்றன. ஆனால், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து தமிழகம் திரும்பாத காரணத்தால் சசிகலா பதவி ஏற்பதில் குழப்பம் நிலவியது.

இந்த சூழ்நிலையில், (நேற்று 7.2 .2017) திடீரென ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு மாலையில் வந்த ஓ.பன்னீர்செல்வம் ஜெ. சமாதி முன்பாக தியானத்தில் அமர்ந்தார்.பின்னர் மௌனத்தை கலைத்த அவர், “நிர்பந்திக்கப்பட்டதால்தான் ராஜினாமா செய்தேன்” என்று அதிரடியாக மீடியாவில் பேச ஆரம்பிக்கவும் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இந்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வராமல் மும்பையிலேயே தங்கியிருப்பது இந்த நிகழ்வுகளில் பாஜக வின் கை இருப்பதை காட்டுவதாக அமைந்துள்ளது. இது குறித்து மும்பையில் தனது உறவினரின் காது குத்து விழாவில் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டு கொண்டே கவர்னர் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டி: தமிழக அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக உன்னிப்பாக கவனித்து வருகிறேன். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் குறித்து ராஜ்நாத்சிங்கிமும், பிரதமர் மோடியிடமும் விவாதித்தேன். அவர்கள் தான் இப்போது ஓபிஎஸ் அணியில் ஒரு எம்எல் ஏ வந்துள்ளார். குறைந்த பட்சம் 120 எம்எல்ஏக்கள் வேண்டும். அதுவரை மும்பையிலேயே இருக்கவும். எப்படியும் இன்னும் ஓரிரு நாட்களில் எம்எல்ஏக்கள் வந்து விடுவார்கள் என்று கூறினார். அதனால் தான் சென்னை செல்லாமல் இங்கேயே இந்த மாதிரி காது குத்து விழாவில் கலந்து கொண்டு தமிழக மக்களுக்கு காது குத்துகிறேன் என்றார்.

There are no comments yet