சென்னை: தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுவார் என பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். திமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தனி கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால் அவர் என்ன செய்யப்போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த நிலையில், ஓபிஎஸ் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் குட்டி அம்மா தீபாவை தலைவியாக ஏற்று தீபா கட்சியில் சேர இருப்பதாக நம்பத்தகாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விரைந்துள்ளதாகவும் இருவரும் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது

இது குறித்து, எம் எல் ஏக்களை சேகரிப்பதில் மிகவும் பிசியாக இருந்த ஓபிஎஸ் நமது கப்ஸா நிருபருக்கு அலைபேசியில் அளித்த பேட்டி: எத்தனையோ பேர் அதிமுக வை விட்டு விலகி வந்தார்கள், ஆனால அனைவரும் கட்சி ஆரம்பிக்கவில்லை. கட்சி ஆரம்பித்தவர்கள் அதை கலைத்துவிட்டு திரும்பவும் அதிமுகவிற்கு சென்று விட்டனர். எம்.ஜி.ஆருக்கு பிறகு ஒருத்தரும் நிலைத்து நிற்கவில்லை. எனவே பணத்தை விரயம் செய்து கட்சி ஆரம்பிக்க மாட்டேன். எனக்கு இத்தனை ஆண்டுகளாக கூழை கும்பிடு போடவும், டயரை தொட்டுக்கும்பிடவும் பழகி விட்டேன். அதனால் அம்மாவிற்கு பிறகு சின்னம்மாவை கும்பிட்டேன். இப்போது பதவி சண்டையால் கோபித்துக் கொண்டு வந்து விட்டேன். திரும்பவும் சின்னம்மாவிடம் செல்லும் வரை குட்டி அம்மா தீபாவுக்கு கும்பிடு போட முடிவு செய்துள்ளேன். அவர் ஆரம்பிக்கும் கட்சியில் கொஞ்ச நாள் குப்பை கொட்டிவிட்டு, இந்த களேபரங்கள் முடிந்தவுடன் சின்னம்மாவுடன் ஐக்கியமாவேன் என்று நம்பிக்கையாக பேசினார்.

There are no comments yet