சென்னை: ஜெயலலிதாவிற்கு துரோகம் இழைத்து விட்டார் ஓ.பன்னீர் செல்வம் என்று குற்றம் சாட்டியுள்ள சசிகலா, ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பின் கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில், சசிகலா அப்பல்லோவில் 75 நாட்கள் மர்ம சிகிச்சை, சொத்துக் குவிப்பு போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பல்லிளித்தார். “அமைதிப்பூங்காவாக இருந்த தமிழக அரசியல் களம் மெரினா போலீஸ் அட்டாக் தீவைப்பால் படு பரபரப்பாக மாறியுள்ளது. செவ்வாய்கிழமை இரவு முதல் ஓ.பன்னீர் செல்வம் “தனி ஒருவனாக” மாறி விட்டார். எம்.எல்.ஏக்கள் இல்லை… அமைச்சர்கள் இல்லை… ஆனாலும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் ஆவியை நம்பி எனக்கு பாவியாக மாறிவிட்டார். அக்காவிற்கு உடல்நலம் குன்றிய உடனே உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டோம். அங்கு தான் தொண்டர்களின் தொல்லை இல்லாமல் மர்ம சிகிச்சை கொடுத்து கதையை முடித்தோம். இங்கிருந்த அனைவருக்கும் அது தெரியும். 33 ஆண்டுகள் வீட்டுச்சிறையில் கல்லுடைக்க வைத்த நாங்கள் 75 நாட்கள் நான் எப்படி “கவனித்துக்” கொண்டேன் என்று அங்கிருந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளது கடுப்பை தருகிறது. எத்தனை விசாரணைக் கமிஷன் வந்தாலும் கவலையில்லை, அப்பல்லோ உள்ளிட்ட கூட்டாளிகளிகளுக்கு கமிஷன் கொடுத்து சரிக்கட்டியது போல நீதிபதிகளுக்கும் கமிஷன் கொடுத்து சரிக்கட்டு விடுவேன் என்று சசிகலா கூறினார். தொடர்ந்து பேசிய சசிகலா, ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்யுமாறு யாரும் கட்டாயப்படுத்தவில்லை மிரட்ட மட்டுமே செய்தேன். என்று கூறிய சசிகலா, சட்டசபையில் பன்னீர் ஸ்டாலினை பார்த்து சிரித்தது குணா படம் பார்த்த நினைவை ஏற்படுத்தியது என்றார்.

தொடர்ந்து அவர், ஜெயலலிதாவிற்கு ஓ.பன்னீர் செல்வம் துரோகம் செய்து விட்டார். 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவை நான் கவனித்துக் கொண்டேன். அவர் விட்டுச் சென்ற பணிகளை செய்ய வேண்டும் “என்பதற்காகவாவது” நான் முதல்வராக பதவியேற்பேன்” என்று ஏதோ மாநகராட்சி துப்புறவு பணியாளர் வேலையை வாரிசு அடிப்படையில் பெற போராடுபவர் போல பேசினார்.

 

பகிர்

There are no comments yet