சென்னை: தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஆட்சியைக் கைப்பற்றப்போவது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியா?, அல்லது அ.தி.மு.க.பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தலைமையிலான அணியா? என்ற உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில், சசிகலா ஆதரவு 6 பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 130எம்.எல்.ஏ.க்களையும், கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், எம்.எல்.ஏ.க்களை மூளைச்ச லவை செய்து, யாரேனும் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு மாற்றிவிடக்கூடாது என்பதற்காக செல்போன்கள் பயன்படுத்துவதிலும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. யாரும் வெளியே செல்ல தடைவிதிக்கப்பட்டு, அனைத்து வசதிகளும் சொகுசுவிடுதியில் செய்து தரப்பட்டுள்ளது.

இந்த சூழலில், எம்.எல்.ஏ.க்களுக்கு மனதை உற்சாகமாக வைக்கும் வகையிலும், பொழுதுபோகும் வகையிலும் கலைநிகழ்ச்சிகளுக்கு அதிமுக தலைமை ஏற்பாடு செய்து இருந்தது. சொகுசுவிடுதியில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்காக நேற்று கரகாட்டம், ஆடல்,பாடல் நடத்தப்பட்டுள்ளது. அதன் பின், இரவு எம்.எல்.ஏ.க்கள் விருப்பப்படி அவர்களுக்கு பிடித்தமான ‘பாட்ஷா’ திரைப்படம் ஒளிபரப்பட்டது என்று அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். மேலும், அந்த பிரமுகர் கூறுகையில், ” இந்த சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்களுக்கு எந்தவிதமான சவுகரியக் குறைபாடும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நீச்சல் குளத்தில் மிதக்கும் “மதுபார்”, மிதக்கும் உணவுவிடுதி, கடற்கரையில் விளையாடும் வசதிகள், கடற்கரையில் ஓய்வெடுக்கும் வசதிகள் என அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளன. செல்போன்கள் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. அப்படியே அவர்கள் யாருடனாவது பேசமுற்பட்டால், மூத்த நிர்வாகி ஒருவரின் கண்காணிப்பில் பேச அனுமதிக்கபடுகிறார்கள். செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டவுடன் ஒரு எம்.எல்.ஏ. கோபித்துக்கொண்டு வெளியேறினார், ஆனால், அவரை நடிகராக இருந்து எம்.எல்.ஏ ஆன ஒருவர் பேசி சமாதானம் செய்து அழைத்து வந்தார். நாள் ஒன்றுக்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதிக்கு வாடகையான ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை செலவாகிறது. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இங்கு இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்க விடாமல் அவர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல். இந்த இக்கட்டான நிலையில், எம்.ஏக்களை அடைத்த சொகுசு பேருந்து 3 மணி நேரமாக மெரினா கடற்கரையிலேயே சுற்றிக்கொண்டிருந்தது. பின்னர் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு கிரீன்வேஸ் சாலைக்கு சென்றது சொகுசு பேருந்து. கிரீன்வேஸ் சாலையில்தான் முதல்வர் ஓபிஎஸ் இல்லமும் உள்ளது. பேருந்தில் இருந்து இறங்கி எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்குள் சென்றபோது, யாருக்கும் தெரியாமல் நைசாக ஓடிச்சென்று ஓபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார் சண்முகநாதன். அங்கே ஓபிஎஸ்சை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். ஓபிஎஸ்சை சந்திக்க விடுவதற்காக சொகுசு பேருந்தில் இத்தனை ஜாக்கிரதையாக சண்முகநாதனை அழைத்துவந்தோம் என்று நொந்து போயிருக்கிறது சசிகலா கோஷ்டி. எம்.எல்.ஏக்கள் மகிழ்ச்சியில் இல்லை என்பதை ஓட்டல் ரூம் பாய் வேடத்தில் சென்ற நமது கப்ஸா நிருபர் கண்டுபிடித்துள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் நடப்பதுபோல் நமீதா நயன்தாரா திரிஷா அமலாபால் போன்ற நடிகைகள் குத்தாட்டம் எதிர்பார்த்த எம்.எல்.ஏக்கள் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மனைமாட்சி, நாட்டுபுற கலைகள் போன்ற நிகழ்ச்சியில் நடனமாடும் வயது முதிர்ந்த கரகாட்டக் கொஷ்டியினர் ஆட்டத்தைக் கண்டு வெம்பிப் போயுள்ளனர்} டாஸ்மாக் சரக்கு பரவாயில்லை, சமோசா பரவாயில்லை ஆனால் ‘கசமுசா’ போதாதால், நாங்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்குவோம்,” என அனைவரும் கூட்டாக தெரிவித்தனர்.

பகிர்

There are no comments yet