சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது தமிழ்த் திரையுலகினர் பலர் ‘வாய்ஸ்’ கொடுத்தனர். ஆனால் ரஜினி மவுனம் காத்தார். ரஜினியை கடந்த 20 வருடத்திற்கும் மேலாக பலரும் அரசியலுக்கு இழுத்துக் கொண்டுதான் உள்ளனர். ஆனால் சொத்து மதிப்பை 20 மடங்காக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் ரஜினி. அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று மில்லியன் டாலர் கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டிருக்க, பல மில்லியன் டாலர் வசூலித்த ‘கபாலி’ யை மலேசியா வாழ் தமிழர்களுக்காக எடுத்து தமிழ்கத்தின் ரசிகர்கள் முகத்தில் கரியை பூசினார். ஆரம்ப காலங்களில் ஒன்றாக இணைந்து நடித்த கமல் ரஜினி, பின்னர் தங்களின் பிசினசை பெருக்க பேசி வைத்துக் கொண்டு ஆளுக்கொரு திசையில் ரசிகனின் பணத்தை ஆட்டையைப் போட தனித்து நின்று ‘தொழில்’ செய்யத் தொடங்கினர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், அப்படி ஒரு ஐடியாவை அவருக்கு பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி கொடுத்துள்ளதாகவும், ஆனால் அரசியல் வேண்டாம் என்று ரஜினியின் நண்பரான நடிகர் அமிதாப் பச்சன் அறிவுரை கூறியுள்ளதாகவும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அப்படி எதுவும் செய்து விடாதீர்கள் என்று ரஜினிக்கு, அவருடைய நெருங்கிய நண்பரும், இந்தி சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் ஆலோசனை கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமிதாப்பும் ஒரு காலத்தில் அரசியலில் இருந்தவர்தான். 80களில் காங்கிரஸில் இருந்தார். அலகாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியும் ஆனார். பின்னர் கசப்புணர்வு தோன்றவே சமாஜ்வாடி கட்சிக்கு இடம் பெயர்ந்தார். பிறகு அரசியலை விட்டே விலகி விட்டார். ரஜினியும், அமிதாப்பும் சேர்ந்து சில இந்திப் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இருபது வயது பெண்ணுடன் நடனம் ஆடி பெண்களுக்கு எதிரான வன்கொடுமை செய்யும் ‘கலைப்போலி’ ரஜினி அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யா ராயுடன் எந்திரன் படத்தில் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது கப்ஸா நிருபர் விசாரித்ததில், இமயமலைக்கு செல்ல தனது வழக்கமான டிராவல்சில் பஸ் டிக்கட் கிடைக்காததால், சிறிது பொழுது போக்கவே இந்த அரசியல் கட்சி டிராமாவை ரஜினி அரங்கேற்றி இருப்பதாக கோடம்பாக்கம் பட்சிகள் பேசிக் கொள்வதாக கண்டுபிடித்துள்ளார். சுய விளம்பரத்திற்காகவும், பட விளம்பரத்திற்காகவும், எந்திரன் படத்தின் பெயரைம் ‘எத்தன்’ என மாற்றி ரிலீஸ் செய்யவும் முடிவெடுத்து ஷங்கருக்கு தூது அனுப்பி உள்ளதாக தெரிகிறது.

பகிர்

There are no comments yet