சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தையும், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் கவர்னர் வித்யாசாகர்ராவிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கினார். தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படியும் கூறியிருந்தார். ஆனால் இதுவரையில் ஆட்சி அமைக்க அவருக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் அழைப்பு விடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் சசிகலா போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்றும் போயஸ் கார்டனில் ஆலோசனை நடந்தது. தன்னை சந்திக்க வந்த நிர்வாகிகள் மத்தியில் சசிகலா பேசியதாவது: ஜெயலலிதா எனக்கு துணை நிற்கும்போது, ஒரு சிலரின் ஆட்டங்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது. ஜெயலலிதா நம்மிடம் தான் இருக்கிறார். கட்சியில் உள்ள புல்லுருவிகளை அடையாளம் காட்டி கொண்டு இருக்கிறார். அதை தான் இன்று நடக்கும் சூழ்நிலை நமக்கு தெரிவிக்கிறது.

நம்மை பிரித்து ஆள நினைக்கும், எவராக இருந்தாலும் தோற்று போவார்கள். இது இரும்பு கோட்டை. இந்த கோட்டையை யாரும் அசைக்க முடியாது. ஜெயலலிதா நிறைய போராட்டங்களை சந்தித்துத்தான் இந்த இயக்கத்தை நடத்தினார். நமக்கும் சோதனை வந்து கொண்டு தான் உள்ளது. அதை வென்று காட்டுவேன்.

நீங்கள் இருக்கும்போது நான் எதற்கும் அஞ்சபோவதில்லை. நியாயமாகவும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை வைத்து உள்ளதால் தான் கொஞ்சம் அமைதி காக்கிறேன். ஓரளவுதான் நாம் பொறுமையை கையாள முடியும். அதற்குமேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம்.

இதற்கிடையே, சசிகலா பகல் 2.25 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச போயஸ் கார்டனில் இருந்து கல்பாக்கம் அருகில் உள்ள கூவத்தூருக்கு புறப்பட்டார். அவரிடம் நிருபர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சசிகலா, ‘பொறுத்து இருந்து பாருங்கள்’ என்று கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

பின்னர் போயஸ் கார்டனில் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் சின்னம்மா கூறியதாவது: முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மனம் மாறியதற்கான பின்னணி என்ன? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அவரால் அ.தி.மு.க.வை கைப்பற்ற முடியாது. அரியணை ஏறவும் முடியாது. சசிகலா பின்னால் நாங்கள் நிற்கிறோம். இந்த இயக்கத்தை விட்டு யார் சென்றாலும் அவர்கள் செல்லாகாசு ஆகி விடுவார்கள். கவர்னர் காலதாமதத்தை தவிர்த்து ஐனநாயகத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக தொண்டர்களை மட்டுமன்றி, நாங்கள் சோறு போட்டு வளர்க்கும் குன்றுகளையும் வழிநடத்தும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. மெரினா கலவரத்திற்கு பிறகு அதிமுக குண்டர்களும், போலீஸ் ரவுடிகளும் வேலையில்லாமல் இருக்கிறார்கல். அவர்களுக்கும் வேலை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறி ‘அக்கா இருந்தால் எனக்கு இப்படியெல்லாம் நடக்குமா’ என்று தனது வழக்கமான அழுகையை ஆரம்பித்தார்.

There are no comments yet