தஞ்சாவூர்: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ‘‘உங்களுடன் நான்’’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். தே.மு.தி.க.வின் 17–ம் ஆண்டு கொடி அறிமுக நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே தே.மு.தி.க. கொடியேற்று விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்து கொண்டு தே.மு.தி.க. கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு கடந்த குடியரசு தினத்தில் தொண்டர்கள் வராததால், பத்திரமாக பார்சல் செய்து வைத்திருந்த போணியாகாத லட்டுகளை வழக்கம்போல் வழங்கினார். பின்னர் விஜயகாந்த் கப்ஸா நிருபர்களிடம் கூறியதாவது: தே.மு.தி.க. கொடிநாளையொட்டி தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான் ‘சல்பேட்டா’ சாப்பிட்டுவிட்டு டெல்டா மாவட்டத்திற்கு வந்துள்ளேன். தினமும் ஏராளமான விவசாயிகள் கள்ளச்சாராயம் கள்ளு கிடைக்காமல் இறக்கிறார்கள். ஆனால் நீங்கள் அதைப்பற்றி கேட்காமல், அரசியல் பற்றி கேட்கிறீர்கள். அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.

ஆனால் பாழாய்ப்போன சரக்கு அடித்ததும் வாய் குழறி தப்பிதமாக பேசிவிடுகிறேன், தொண்டர்களை அடித்தும் விடுகிறேன். மற்றவர்கள் போல் ‘நமக்கு நாமே’ ”அன்புமணியாகிய நான்’ என்று சுயலாபத்திற்காக பணியாற்றக் கூடாது என்பதால், “உங்களுடன் நான்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து, சரிக்கு சமமாக சரக்கு சாப்பிட்டு குடிமகன்களின் அபிமானத்தை பெற்று ஓட்டுக்களை அள்ளுவேன். தமிழகத்தில் நிலையான கவர்னர் இல்லை. நிலையான அரசு இல்லை. கவர்னர், அரசு என்ற இருவரையும் தேடி ஆள் அனுப்பி உள்ளேன். தமிழகத்தில் கவர்னர் ஆட்சி தேவை இல்லை. நானே முதல் அமைச்சர் பதவி ஏற்று மக்கள் பணி ஆற்றுவேன். தமிழகத்தில் ‘தண்ணி’ பிரச்சினையால் எத்தனை விவசாயிகள் இறந்துள்ளனர் என இந்த அரசு அறிக்கை வெளியிட வில்லை. விவசாயிகளை பாதுகாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் மக்கள் பிரச்சினை பற்றி தான் பேசுவேன். டாஸ்மாக் சரக்குக்கு மிக்சிங் செய்ய கூல்டிரிங் கிடைக்காமல் கடைக்கோடி தமிழனும் திண்டாடுகிறான். சிறப்பாக இருக்க வேண்டிய தே.மு.தி.க.வின் வளர்ச்சி சிரிப்பாய் சிரித்துக்கொண்டு உள்ளது.

பின்னர் விஜயகாந்த் தங்கி இருந்த ஓட்டலுக்கு திரும்பினார். அங்கு ‘‘உங்களுடன் நான்’’ நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தஞ்சை டெல்டா தெற்கு மாவட்ட தே.மு.தி.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வந்திருந்தனர். முதியவர் முதல் கைகுழந்தை வரை அனைவருக்கும் ‘சல்பேட்டா’ ஒரு கட்டிங்கும் தொட்டுக் கொள்ள பீனிக்ஸ் பிராண்டு ஊறுகாயும், வழங்கப்பட்டதாக கப்ஸா நிருபர் தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet